தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு பிப்ரவரி காண்டிராக்டில் 57,100 ரூபாயாக ஏற்றம் கண்ட நிலையில், இன்று அதனுடன் ஒப்பிடும்போது சுமார் 8,400 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலையானது 25% ஏற்றம் கண்ட நிலையில், இந்த ஆண்டில் இதுவரையில் 3% வீழ்ச்சி கண்டுள்ளது.

இது சர்வதேச சந்தையின் சரிவு, அமெரிக்க பத்திர லாபம், டாலர் மதிப்பு என அனைத்தும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளன.

என்னென்ன பார்க்க போகிறோம்?

என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்ன? இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும். இந்த இடத்தில் வாங்கமாலா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். அடுத்தடுத்த சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.10 டாலர்கள் குறைந்து, 1827.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வில் 1809.75 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1809.65 டாலர்களாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சமான 1829.10 டாலர்களையும் உடைத்து இன்று இதுவரையில் 1830.70 டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது கவனிக்கதக்கது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 0.20% ஏற்றம் கண்டு, 24.918 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் முந்தைய அமர்வினை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்க விஷயம். எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குழப்பத்திலேயே காணப்படுகிறது. ஆரம்பத்தில் சற்று சரிவில் காணப்பட்ட தங்கம் விலையானது, தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக 10 கிராம் தங்கம் விலையானது தற்போது 61 ரூபாய் அதிகரித்து, 48763 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வில் 48702 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 48669 ரூபாயாகவே தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 486 ரூபாய் அதிகரித்து, 65,250 ரூபாயாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது முந்தைய அமர்வில் 64,764 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 65,056 ரூபாயாக தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கு தேவை அதிகரிக்கலாம்

வெள்ளிக்கு தேவை அதிகரிக்கலாம்

சீனாவின் வளர்ச்சி விகிதம் எதிர்ப்பார்ப்பினை விட நேர்மறையான வளர்ச்சியினை கண்ட வரும் நிலையில், தொழில் துறை குறித்தான குறியீடுகளும் சாதகமாக வந்து கொண்டுள்ளன. இதன் காரணமாக சீனாவின் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு தரலாம்

தங்கத்திற்கு ஆதரவு தரலாம்

பொதுவாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது சரிந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கலாம் என்ற எண்ணம் நிலவி வருகின்றது. இது முதலீட்டாளர்களை குறைந்த விலையில் வாங்க தூண்டும். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமெரிக்காவின் மற்றொரு ஊக்கத்தொகை குறித்தான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இது டாலருக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு, நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது. இன்றும் டாலரின் மதிப்பு 0.03% ஏற்றம் கண்டு 90.793 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு கொரோனா தடுப்பூசி முதல் நூறு நாட்களில் 100 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்றும் ஜோ பிடன் கூறியுள்ளார். அதோடு 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை குறித்தான எதிர்பார்ப்புகளும் டாலருக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதனால் தங்கம் மற்ற நாணயதாரர்களுக்கு விலை உயர்ந்ததாகவும் காணப்படுகிறது.

தங்கம் தேவை மீண்டு வரலாம்

தங்கம் தேவை மீண்டு வரலாம்

இதற்கிடையில் உலக தங்க கவுன்சில் தங்கம் தேவையானது இந்த ஆண்டில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்தால், நிச்சயம் தங்கம் தேவையும் மீண்டு வர தொடங்கும். இதனால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், அது ஆபரணத் தங்கத்தில் எதிரொலிப்பது கடினம். இது அதிக விலை சரிவினை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று என்னெ செய்யலாம்?

இன்று என்னெ செய்யலாம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் இந்த இடத்தில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. ஏனெனில் இண்டிராடேவில் ஏற்றம் காணுவது போல இருந்தாலும், வார் கேண்டில் பேட்டர்னில் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall first day in a week, but silver price up today

Gold price update.. Gold prices fall first day in a week, but silver price up today
Story first published: Monday, January 18, 2021, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X