gold price Today: தங்கம் விலையானது இன்று ஐந்தாவது நாளாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது.
தங்கம் விலையானது தொடர்ந்து 1 மாதத்திற்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலர் மதிப்பு, தொடர்ந்து வலுவடைந்து காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்திற்கு பாதுகாப்பாக அமையலாம்.
பணவீக்கம் Vs தங்கம்
தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். மேற்கொண்டு டாலர் மதிப்பு, பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.
வட்டி அதிகரிக்கலாம்
மேலும் தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.
எனினும் தொடர்ந்து தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 16.15 டாலர்கள் குறைந்து, 1835.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது 1.28% குறைந்து, 21.433 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 358 ரூபாய் குறைந்து, 55,870 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 589 ரூபாய் குறைந்து, 65,044 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 5250 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 42,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 5723 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 370 ரூபாய் குறைந்து, 57,230 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்றே குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 60 பைசா குறைந்து, 71.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 71,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications