சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா? நிபுணர்கள் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றோடு தங்கம் விலையானது ஐந்தாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது.

இது தங்கம் வாங்க நினைபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறினாலும், இது போன்ற சரிவுகள் குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி இன்று சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் கூறுகின்றனர். சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த நான்கு தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸுக்கு 3.60 டாலர்கள் குறைந்து, 1847.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது ஏற்பட்ட குறைந்தபட்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விடவும், இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கி வைப்பது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போல, வெள்ளியின் விலையும் சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.30% வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ச்சியாக கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று 25.473 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக இன்றோடு நான்காவது நாளாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 250 ரூபாய் குறைந்து, 48,895 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 242 ரூபாய் குறைந்து, 66,280 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

நேற்று எம்சிஎக்ஸ் சந்தை விடுமுறை

நேற்று எம்சிஎக்ஸ் சந்தை விடுமுறை

கடந்த செவ்வாய்கிழமையன்று அரசு விடுமுறை என்பதால் இந்திய சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையின் அழுத்தம் தங்கம் விலையில் காணப்பட்டது. இதன் காரணமாக சர்வதேச சந்தையை விட, இந்திய சந்தையில் விலை அதிகமாகவே குறைந்துள்ளது.

இன்று மானிட்டரி பாலிசி கூட்டம்

இன்று மானிட்டரி பாலிசி கூட்டம்

இன்று அமெரிக்காவின் மானிட்டரி பாலிசி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சந்தைகள் தொடர்ந்து அழுத்தத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க விரைவில் ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் இன்னும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய அறிவிப்புகள் இருக்காது?

முக்கிய அறிவிப்புகள் இருக்காது?

இன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய நடவடிக்கைகள் இருக்காது என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே, இந்த ஆண்டில் வட்டி விகிதத்தில் எதுவும் மாற்றம் இருக்காது. இது பொருளாதாரத்தினை உயர்த்த ஏதுவான ஒரு காரணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் இன்று என்ன தான் நடக்கும் முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஊக்கத்தொகையில் கவனம்

ஊக்கத்தொகையில் கவனம்

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை குறித்து, ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. இதன் மூலம் விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு அமெரிக்கா மக்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கத்தொகையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிடிபி எதிர்பார்ப்பு

ஜிடிபி எதிர்பார்ப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் நான்காவது காலாண்டு ஜிடிபி தரவுகள் இன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது. அதோடு வேலையின்மை நலன் மற்றும் வீடு விற்பனை குறித்தான தரவுகளும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிடன் அரசு என்ன செய்யபோகிறதோ?

பிடன் அரசு என்ன செய்யபோகிறதோ?

தற்போது புதிய வகை கொரோனா பரவலுக்கும் மத்தியில் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிப்புகள் வரலாம் என்றாலும், வரி உயர்வு, அமெரிக்க சீன உறவு, கரன்சி மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றில் நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

எனினும் பொதுவாக பார்க்கும்போது பிடன் அரசு விரைவில் மிகப்பெரிய ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்துக்கு ஆதரவாகவும், தங்கத்திற்கு எதிராகவும் அமையலாம் என்ற கருத்தே நிலவி வருகின்றது. ஆக இது மேற்கொண்டு தங்கம் விலையானது சரிய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அமெரிக்க ஊக்கத்தொகை பற்றிய எதிர்பார்ப்புகள், பொருளாதாரத்தினை மீட்டு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான காரணியாக இருப்பதாலும், குறைவான விலையில் முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்பதாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தினை வாங்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்ட்டிரா டே வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices fall for fifth day in row, silver also tumble

Gold price updates.. gold prices fall for fifth day in row, silver also tumble
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X