தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாவது நாளாக.. எவ்வளவு வீழ்ச்சி.. என்ன காரணம்..!

இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஆபரணங்களில் ஒன்று தான் தங்க ஆபரணம். ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்பாட் கோல்டின் தேவை வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வருகிறது. எனினும் விலை தொடர்ந்து சற்று அதிகரித்தே தான் காணப்படுகிறது.

அதிலும் கடந்த ஏப்ரல் 1 லிருந்து இன்று வரையில் இரண்டு தினங்கள் மட்டுமே சற்று தங்கம் விலையானது குறைந்துள்ளது. மீதமுள்ள 7 நாட்களில் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் கண்டு கொண்டே வருகிறது.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் ஏப்ரல் 1-லிருந்து ஒரே நாள் மட்டுமே வீழ்ச்சி கண்டு மற்ற நாட்கள் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது. இதற்கிடையில் இன்று தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று 0.04% குறைந்து, 1,683.70 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 51 ரூபாய் குறைந்து, 44,890 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த ஐந்து தினங்களாகவே எம்சிஎக்ஸ் சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், எம்சிஎக்ஸ் சந்தையில் அவ்வளவாக அது எதிரொலிக்கவில்லை என்றே கூறலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையினை போல் அல்லாமல், வெள்ளி விலையானது 0.47% அதிகரித்து தற்போது 15.277 டாலராக வர்த்தகமாகி வருகின்றன. கடந்த மூன்று தினங்களாகவே விலை சற்று குறைந்து இருந்தாலும், தற்போது சற்று அதிகரித்து தான் வர்த்தகமாகி வருகிறது. சீனாவில் உற்பத்தி தற்போது தொடங்கியுள்ள நிலையில் வெள்ளியில் தேவையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெள்ளியின் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும், இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளி விலையானது குறைந்தே காணப்படுகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 179 ரூபாய் குறைந்து, 42,960 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த நான்கு தினங்களாகவே அதிகரித்து வந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே, அதாவது கடந்த 9 தினங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே சற்று குறைந்துள்ளது. எனினும் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,004 ரூபாயாகவும், சவரனுக்கு சற்று அதிகரித்து 32,032 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது மக்களை அவ்வளவாக பாதிக்கவில்லை என்றே கூறலாம்.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து கிராமுக்கு 40.96 ரூபாயாகவும், இதே கிலோ 40,960 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த ஒன்பது தினங்களில் ஒரே நாள் மட்டும் சற்று குறைந்துள்ளது. இவற்றை வாங்க ஆள் இல்லாவிட்டாலும் விலைமட்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

இதுவும் காரணம்

இதுவும் காரணம்

உலகளவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அவ்வப்போது சற்று இறக்கம் கண்டாலும், விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு தான் வருகிறது. ஏனெனில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம், சர்வதேச பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

உலகளவில் நிலவி வரும் கூர்மையான மந்த நிலையின் காரணமாக குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அரசாங்கம் கடன் வாங்குவதில் பெரிய அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. மேலும் அமெரிக்காவில் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களால் அந்த நாட்டு நாணயம் வலுவடைந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தங்கம் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆக இன்று சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+