தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..!

இந்தியாவில் தங்கம் விலையானது கடந்த இரண்டு தினங்களாக சரிந்து வரும் நிலையில், இன்னும் குறையுமா? இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என்பதை பற்றித் தான் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்காவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, தங்கம் விலையானது சர்வதேச சந்தையிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

அமெரிக்காவினை தற்போது உலுக்கி வரும் கொரோனாவுக்கு மத்தியில், கறுப்பினத்தவர் ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர், போலீசாரால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் தொடர்ந்து லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஏற்கனவே அமெரிக்காவில் இந்த இன பாகுபாடு பற்றி பல குற்றசாட்டுகள் இருக்கும் நிலையில், தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக ஜார்ஜ் போலீசாரால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதற்கிடையில் தங்கம் விலையும் குறைந்து வருகிறது.

உற்பத்தி தொடக்கம்

உற்பத்தி தொடக்கம்

எனினும் இந்த சமயத்திலும் சில நாடுகளில் தற்போது தொழிற்சாலைகள் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளிக்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைந்த போதிலும், வெள்ளி விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், இந்தியா போன்று பல நாடுகளிலும், பல கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியினை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

பொருளாதாரம் மேன்மடையும்

பொருளாதாரம் மேன்மடையும்

இதன் காரணமாக பொருளாதாரம் சற்று மேன்மையடையும். இதனால் மற்ற முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைந்து வருகிறது. மறுபுறம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் உள்நாட்டு பதற்றம் மற்றும் அமெரிக்கா சீனா பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான மன நிலையே நீடித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் மூன்றாவது நாளாக தங்கம் விலையானது குறைந்து வருகிறது. குறிப்பாக தற்போது (11.45 மணியளவில்) தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 6.20 டாலர்கள் குறைந்து, 1,727.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.36% வீழ்ச்சியாகும். டெக்னிக்கல் பேட்டனிலும் டாலரில் தங்கம் 1737 டாலருக்கு கீழ் செல்லிங் செய்யலாம் என்ற விதமாக உள்ள நிலையில், தங்கம் விலையானது 1 டே கேண்டிலில் சற்று குறையும் விதமாகத் தான் உள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாக, எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக சரிந்து வருகிறது. அதுவும் ஜூன் மாத கான்ட்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், ஆகஸ்ட் மாத கான்ட்டிராக்டில் விலையானது குறைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை 10 கிராமுக்கு 118 ரூபாய் குறைந்து, 46,440 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்லியின் விலை பெரியளவில் மாற்றமில்லாமல் தான் வர்த்தகமாகி வருகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 0.033 டாலர் குறைந்து, 18.227 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி இரண்டாவது நாளாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது, நேற்று பலமான சரிவினைக் கண்டது. இந்த நிலையில் இன்று காலையில் 49,530 ரூபாயாக தொடங்கிய நிலையில், தற்போது 49,730 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவு விலையுடன் ஒப்பிடும்போது தற்போது 129 ரூபாய் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலையானது பெரிளவில் மாற்றமில்லாமல் தான் உள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 4508 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 36,064 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,9185 ரூபாயாகவும், இது 10 கிராமுக்கு 49,180 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 49.12 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 1040 ரூபாய் குறைந்து, 49,120 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஆறு தினங்களாகவே அதிகரித்து வரும் வெள்ளியின் விலையினை அடுத்து, இன்று வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+