2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

Gold: தங்கம் விலையானது இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகிறது. எனினும் இது மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் முதலீட்டாளர்களுக்கும் தங்க நகை ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகின்றது. இது நகை வாங்க நினைப்போருக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இது நீண்டகால நோக்கில் குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ரெசசன் அச்சம் என்பது இன்னும் அதிகளவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். எப்படியிருப்பினும் தொடர்ந்து உச்சத்த்னை எட்டி வந்த தங்கத்தில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது. இது தங்கம் வாங்க சரியாக வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

மேற்கொண்டு தங்கம் விலையை ஊக்குவிக்கும் விதமாக டாலரின் மதிப்பு, பத்திர சந்தையானது சரிவில் காணப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை ஊக்குவிக்கலாம். ரூபாயின் மதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் பணவீக்கமும் தொடர்ந்து உச்சத்தில் காணப்படும் நிலையில், இது தொடர்ந்து கண்கானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து பொருளாதாரம் வளர்ச்சி காண தொடர்ந்து மத்திய வங்கிகள் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 11.70 டாலர்கள் குறைந்து, 2023.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே வெள்ளி விலை சற்று குறைந்து, 25.032 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்தவரையில் இன்று புனித வெள்ளி என்பதால் விடுமுறையாகும்.

ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5640 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 45,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 6,153 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 61,530 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 80.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 80,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+