தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் ஆறு நாட்களாகவா..இன்னும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் இன்றோடு தங்கம் விலையானது ஆறாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. இது அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதையடுத்து இந்த சரிவினைக் கண்டு வருகின்றது.

அதெல்லாம் சரி இன்று சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

comex தங்கம் விலை நிலவரம்

comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்றோடு ஆறாவது நாளாகவே தங்கம் விலையானது பலமான வீழ்ச்சியினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 11.80 டாலர்கள் குறைந்து, 1833.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையை விடவும், இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சரியும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையான 1828.40 டாலர்களை உடைக்கும் போது, இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கி வைப்பது நல்லது.

comex வெள்ளி விலை நிலவரம்

comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போல, வெள்ளியின் விலையும் கிட்டத்தட்ட 2% சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.484 டாலர் வீழ்ச்சி கண்டு, 24,900 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், இன்று பலத்த சரிவினை காணத் தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இது இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக இன்றோடு ஐந்தாவது நாளாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 208 ரூபாய் குறைந்து, 48,657 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 1006 ரூபாய் குறைந்து, 65,530 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது வலுவாக உள்ள நிலையில், தங்கம் விலையானது சரிவினை காணத் தொடங்கியுள்ளது. ஏனெனில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை விலை அதிகமுள்ளதாக ஆக்கியுள்ளது. டாலரின் மதிப்பு ஓவர் நட்டில் 0.12% அதிகரித்து 90.745 டாலராக அதிகரித்துள்ளது.

பூஜ்ஜியத்துக்கு அருகில் வட்டி விகிதம்

பூஜ்ஜியத்துக்கு அருகில் வட்டி விகிதம்

நேற்று நடந்த அமெரிக்காவின் மானிட்டரி பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல், பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மாத பத்திர திட்டமும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் முன்னேற இது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது.

முக்கிய அறிவிப்புகள்?

முக்கிய அறிவிப்புகள்?

இதனையடுத்து எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதத்தில் மாற்றமில்லா நிலையில், அமெரிக்காவின் நான்காவது காலாண்டு ஜிடிபி, வேலையின்மை நலன், வீடு விற்பனை குறித்தான தரவுகளும் இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை குறித்து, ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதன் மூலம் விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு அமெரிக்கா மக்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கத்தொகையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா டாலரின் மதிப்பு மேற்கொண்டு வலுவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் கான்டிரக்ட் எக்ஸ்பெய்ரி

தங்கத்தின் கான்டிரக்ட் எக்ஸ்பெய்ரி


இன்னும் சில தினங்களில் தங்கத்தின் கான்டிரக்ட் எக்ஸ்பெய்ரி (feb05, 2021) ஆகவிருப்பதால், முதலீட்டாளார்கள் தங்கள் கைகளில் இருக்கும் ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யலாம். புராபிட்டினை புக் செய்ய நினைக்கலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது டெக்னிக்கலாக தங்கம் விலையானது சரியும் விதமாக காணப்படுவதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். குறிப்பாக இன்ட்டிரா டே வர்த்தகர்கள் தங்கத்தினை வாங்குவதை தவிர்க்கலாம்

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண சந்தையில் தங்கம் விலையில் அது பெரியளவில் எதிரொலிக்கவில்லை. ஏனெனில் இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4622 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 36,976 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5062 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 40,496 ரூபாயாகவும் உள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதேபோல் ஆபரண வெள்ளியின் விலையும் கிராமுக்கு 70.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து 70,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவையையே எதிரொலிக்கிறது. ஆக சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தாலும், அது ஆபரணத் தங்கத்தின் விலை அந்தளவுக்கு குறைவது சந்தேகம் தான் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices fall for sixth day in row, silver also heavy fall in both market

Gold price updates.. Gold prices fall for sixth day in row, silver also heavy fall in both market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X