தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் தொடர்ச்சியாக சற்று சரிவினைக் கண்டு வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் ஒரு வருட சரிவு விலையானது கிட்டதட்ட 44,000 ரூபாயினை தொட்ட நிலையில், அதனையே சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இன்று வரையில் மொத்தமாக பார்க்கும்போது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதோடு தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிவில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
இன்று என்ன பார்க்க போகிறோம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
இது வாங்க சரியான இடம்
தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 9,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமார் 3,500 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. அதோடு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சரிந்து வரும் நிலையில், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இது தொடர்ச்சியாக கடந்த மூன்று அமர்வுகளாகவே தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 3.85 டாலர் குறைந்து, 1728.85 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்தால் இன்னும் சரியலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.12% குறைந்து, 24.837 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் காணப்படுகிறது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுளது. ஆக தற்போது பெரியளவில் மாற்றமில்லா விட்டாலும், இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 94 ரூபாய் அதிகரித்து, 46,516 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்று இன்னும் சற்று சரிவினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையில் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 52 ரூபாய் அதிகரித்து, 66,176 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் கணவில்லை. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4,375 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 35,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில்,இன்று சற்று குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலை
சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 4770 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 38,160 ரூபாயாகவும் காணப்படுகிறது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
ஆபரண வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் நேற்று ஆபரண வெள்ளியின் விலையானது பலமான சரிவினைக் கண்ட நிலையில், இன்று கிராமுக்கு 4.70 ரூபாய் அதிகரித்து, 71.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 4,700 ரூபாய் அதிகரித்து, 71,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், முதல் நாளே சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நேற்று பலத்த சரிவினைக் கண்டது. ஆனால் இன்று மீண்டும் அதே அளவு ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலையில் தாக்கம்
அமெரிக்க பத்திர லாபம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு, இரண்டு வார சரிவில் இருந்து மீண்டுள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஓரளவு இழப்புடன் வர்த்தகம் செய்யப்படுகின்றது. அதோடு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் இன்னும் சிறிது காலத்திற்கு குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது. ஆக இதெல்லாம் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களின்
எனினும் இந்தியாவில் தங்கம் விலையானது சுறுசுறுப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகுதியில் வரவிருக்கும் அமெரிக்க பணவீக்க தரவுகளை தங்க வர்த்தகர்கள் கவனிக்கலாம். அதோடு வேலையின்மை நலன் கோரிக்கைகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை தரவுகளை கவனிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் எதிரொலி சந்தையில் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு அதிகரிக்கலாம்
அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகளை வெளியே எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பங்கு சந்தையானது பலமான சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கத்தினை பொறுத்த வரையில் தற்போது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் 1760 டாடலர்களை உடைத்து சென்றால் வாங்கலாம். ஏனெனில் கடந்த சில வாரங்களாக விலையினை உடைக்காமல் தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இருப்பினும் விலை குறையும் போது, நீண்டகால முதலீட்டாளார்கள் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!



Click it and Unblock the Notifications