மூன்றாவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கமாடிட்டி சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் கடந்த சில வாரங்களாகவே உச்சத்தினை தொட்டு வருகிறது. சொல்லப்போனால் காலம் காலமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இடையில் அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு இடைவெளிகளை பயன்படுத்தியும் லாபம் பார்க்க முடியும் என்றால், அது கமாடிட்டி வர்த்தகத்தில் தான் முடியும்.

சரி இன்றைய கதைக்கு வருவோம். கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் சற்றே குறைந்த வண்ணம் உள்ளது.

முதலீட்டாளர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்

இது தங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கி அதிகரிக்கும் என்றே முதலீட்டாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதன் காரணமாக எப்போது எல்லாம் தங்கம் விலை குறைகிறதோ? அப்போது வாங்கி லாபம் பார்க்கும் முதலீட்டாளர்களும் உள்ளனர். தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கும் என்பதால், செல்லிங்க் ஆப்சன் என்பது மிக ரிஸ்க்கான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றாலும், பல நாடுகள் விரைவில் கொரோனாவிற்கான தடுப்பூசியை விரைவில் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக அப்படி நிபுணர்கள் கூறுவது போல் ஒரு வேளை தடுப்பூசி வந்துவிட்டால், எளிதில் இந்த நெருக்கடியான நிலையினை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

பொருளாதார வீழ்ச்சி தடுக்கப்படும்
 

பொருளாதார வீழ்ச்சி தடுக்கப்படும்

இதன் காரணமாக சரிந்து வரும் பொருளாதாரத்தினை தடுக்க முடியும். காற்று வாங்கிக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்து விடும். இதனால் பணி நீக்கம் குறையும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பணப்புழக்கமும் அதிகரிக்கும். இதன் காரணமாக தேவையும் அதிகரிக்கும்.

முதலீடுகள் மாறலாம்

முதலீடுகள் மாறலாம்

எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதாரம் துளிர் விட ஆரம்பிக்கும். இதனால் தங்கத்தில் செய்து வரும் முதலீடுகள் பங்கு சந்தைக்கு மாறலாம். ஆக அப்படி ஒரு காலம் வரும் போது நிச்சயம் தங்கம் விலையானது சரியக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு. அது அமெரிக்கா சீனா பிரச்சனை தான். ஏனெனில் மேற்கொண்டு இவ்விரு நாடுகளின் பிரச்சனைகள் அதிகரித்தால், உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியானது, சர்வதேச நாடுகளையும் பாதிக்கும் என்பதும் நினைவில் கொள்ள தக்கது.

வட்டி விகிதம் குறையலாம்

வட்டி விகிதம் குறையலாம்

எனினும் இதற்கு மத்தியிலும் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, பல நாடுகளின் மத்திய வங்கிகள் ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் 13 மில்லியனை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 5,91,962 பேராக அதிகரித்துள்ளது. ஆக இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கியிருந்தாலும், தற்போது வரை அதன் பாதிப்பு அதிகரித்து இருந்தாலும், இன்று வரை அதன் கோரத்தாண்டவம் குறைந்ததாக தெரிய வில்லை.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று தற்போது அவுன்ஸூக்கு 1 டாலர் குறைந்து 1,799.25 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது குறைந்தபட்சம் 1795.55 டாலராக இருந்த நிலையில், தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது தற்போது 0.59% சரிந்து காணப்படுகிறது. இது தற்போது 0.116 டாலர் குறைந்து 19.457 டாலராக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது தொடர்ச்சியான இரண்டாவது நாள் சரிவாகும்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் மூன்றாவது நாளாக தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 7 ரூபாய் அதிகரித்து, 48,784 ரூபாயாக காணப்படுகிறது. எனினும் மூன்றாவது நாளாகவும் தங்கம் விலையானது சற்று குறையும் நிலையிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளியின் விலையானது தற்போது 424 ரூபாய் குறைந்து, 52,186 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.74% வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக இன்றும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall for third day in a row

Gold update.. Gold prices fall for third day in a row
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X