நான்காவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்திலிருந்து தட தடவென சரிவு.. !

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது குறையவே குறையாதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு அனுதினமும் புதிய வரலாற்று உச்சத்தினை கண்டு வந்தது தங்கம் விலை.

இன்னும் உலகமே கொரோனாவின் கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித் தவித்த நிலையிலும், தங்கம் விலையானது மிக சுறுசுறுப்பாக ஏற்றம் கண்டு வந்தது.

ஒரு புறம் இதன் காரணமாக சந்தை முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருகிறார்கள் என்றாலும், புதிய முதலீடுகளை உச்சத்தில் எப்படி செய்வது என்ற பயமும் இருந்து வந்தது.

புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்

புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்

தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தாலும், அது தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே இருக்குமா? என்ற பயமும் ஒரு புறம் இருந்து வருகிறது. ஓரு புறம் நிபுணர்கள் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கும் என்று கூறினாலும், அது ஒரே அடியாய் ஏற போவதில்லை என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கிடைத்த லாபத்தினை புக் செய்து விட்டு, பின்பு சற்று விலை குறைந்ததும் மீண்டும் வாங்கலாம் என்ற எண்ணமும் நிலவி வந்தது. ஆக இதுவும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

டாலர் வலிமை

டாலர் வலிமை

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த தங்கம் விலையானது, சில தினங்களாகவே மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. இது அமெரிக்காவின் இரண்டாம் கட்ட நிதி ஊக்கம் நிச்சயம் கிடைக்கும் என்ற உணர்வும் டாலரின் மதிப்பில் எதிரொலித்தது. இதன் காரணமாக தங்கம் விலையில் இது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

பட்டையை கிளப்பிய சர்வதேச பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பிய சர்வதேச பங்கு சந்தைகள்

கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாத சர்வதேச பங்கு சந்தைகள், சில தினகளாக பல மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டு வருகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தற்போது பங்கு சந்தையின் பக்கம் திரும்பியுள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா காங்கிரஸ் மிகப்பெரிய ஊக்குவிப்பு சலுகைக்கு ஒப்புக் கொள்ளும் என்ற எண்ணமும் நிலவி வந்தது.

அமெரிக்கா சீனா பதற்றம்

அமெரிக்கா சீனா பதற்றம்

இதற்கிடையில் வருகிற முதல் கட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா சீனா இடையேயான பதற்றத்தினை தணிக்கும் வகையிலான பேச்சு வார்த்தைகள் இருக்கலாம் என்ற நிலை நீடித்து வருகிறது. இதுவும் டாலரின் மதிப்பு அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை, ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய ஈர்த்தது.

அதிகரிக்கும் பத்திர லாபம்

அதிகரிக்கும் பத்திர லாபம்

அமெரிக்காவில் கடந்த வாரங்களில் வீழ்ச்சி கண்டு வந்த அமெரிக்கா பத்திர சந்தையானது மீண்டும், தற்போது டாலரின் வலிமையால் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பத்திர முதலீட்டாளர்கள் மீண்டும் அதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால், தங்கம் விலையானது மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.

நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி

நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி

உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவிற்கு விடிவுகாலமே கிடையாதா? என்ற கேள்விக்கு சற்றே நம்பிக்கை அளிக்கும் விதமாக ரஷ்யா ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவினை முற்றிலும் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் காரணமாகவும் தங்கம் விலையானது சரிய ஆரம்பித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து நான் காவது நாளாக விலை சரிந்து காணப்படுகிறது. இதனை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலையானது இந்த 4 நாட்களிலேயே வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இது தற்போது( ஆகஸ்ட்12, 2020 10 மணியளவில்) 3.42% வீழ்ச்சி கண்டுள்ளது. விலையானது தற்போது அவுன்ஸூக்கு 69.45 டாலர்கள் குறைந்து 1,877.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தங்கம் விலையினை விட இருமடங்கிற்கும் மேலாக சரிந்துள்ளது. இது தற்போது 8.33% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது 2.127 டாலர் குறைந்து, 23.920 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக பலத்த சரிவினை காண ஆரம்பித்துள்ளது. கடந்த 8 தினங்களாக சிறுக சிறுக ஏற்றம் கண்டு வந்த வெள்ளி விலையானது இரண்டே நாளில் வீழ்ச்சி கண்டுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது நான்காவது நாளாக சரிய ஆரம்பித்துள்ளது. இது தற்போது 3.27% சரிவிலேயே தொடங்கியுள்ளது. தற்போது அக்டோபர் மாத காண்டிராக்டில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 1629 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 50,300 ரூபாயாக காணப்படுகிறது. இது மேலும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

இதே போல சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளி விலையானது இரண்டாவது நாளாக சரிய ஆரம்பித்துள்ளது. இது தற்போது 7.65% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 5137 ரூபாய் குறைந்து 61,760 ரூபாயாக காணப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், செவ்வாய்கிழமையன்று சவரனுக்கு 332 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 5,314 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

தூய தங்கத்தின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், செவ்வாய்கிழமையன்று தங்கம் விலையானது கிராமுக்கு 5,803 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 46,424 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரன வெள்ளியின் விலையானது இன்னும் பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், செவ்வாய்கிழமையன்று கிராமுக்கு 72.50 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 72,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது கிலோவுக்கு 2,650 ரூபாய் குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+