வாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்.. வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களின் வாழ்வில் தங்கம் ஒரு இன்றியமையாத ஒரு பொருளாக மாறி வருகிறது. நம் பாரம்பரியத்தோடு ஒன்றி இருக்கும் தங்கம், இன்று சமூகத்தில் உங்களின் மதிப்பினைக் கூட்டும் பொருளாக மாறியுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழக்கத்தில் தங்கம் வெறும் ஆபரணமாகவும் மட்டும் அல்லாமல், முதலீட்டிலும் தங்கம் தான் முதன்மையாக உள்ளது. இதனாலே இந்த விலை மதிப்புயர்ந்த உலோகத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

ஆரம்ப காலகட்டங்களில் திட வடிவத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த தங்கமானது, தற்போது டிஜிட்டல் வடிவிலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்களும் கணித்து வருகின்றனர். சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இன்றைய விலை நிலவரம் என்ன? அடுத்து எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் ஒரு முக்கிய முதலீடு
 

தங்கம் ஒரு முக்கிய முதலீடு

மக்களுக்கு அவர்களுடைய வாழ்நாள் இலக்குகள் லட்சியங்களை அடைய உதவுவதில் தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. தங்கம் செல்வத்தை பாதுகாக்கும் ஒரு திடமான மற்றும் நிலையான வழிமுறையாக அறியப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு அதன் உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உணர்வை அளிக்கிறது. இந்தியர்களில் 70% மேல் நீண்ட நாட்களானாலும் தங்கம் ஒருபோதும் அதன் மதிப்பை இழப்பதில்லை என்று நம்புகின்றனர். இதனாலேயே அவர்கள் தங்கத்தினை முக்கிய முதலீடாக கருதுகின்றனர்.

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு

இதே பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலைக்கு எதிரான பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால் 63% இந்தியர்கள் தங்கத்தை அதிகமாக விரும்புகின்றனர். இதே 70% இந்தியர்கள், தங்கத்தை சொந்தமாக வைத்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிப்பதாக ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர். இப்படி தங்கள் உணர்களில் கலந்துள்ள தங்கத்தினை இன்றைய இளைய தலைமுறையினர், காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தங்கமாக முதலீடு செய்கின்றனர்.

காமெக்ஸ் சந்தையில் gold விலை

காமெக்ஸ் சந்தையில் gold விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது இன்று காலையில் இருந்தே பெரிய அளவில் மாற்றம் இல்லை. இது எதிர்பார்த்து ஒன்று தான் என்றாலும், நிபுணர்கள் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவுன்ஸூக்கு 2.15 டாலர்கள் அதிகரித்து, 1881.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 1876.90 டாலர்களாக முடிவடைந்த தங்கம் விலை, இன்று தொடக்கத்தில் 1876.90 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

காமெக்ஸ் சந்தையில் Silver விலை
 

காமெக்ஸ் சந்தையில் Silver விலை

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், வெள்ளியின் விலையானது 1.36% ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 23.973 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 23.646 டாலர்களாக முடிவடைந்த வெள்ளி விலை, இன்று தொடக்கத்தில் 23.695 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 54 ரூபாய் குறைந்து, 50,645 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 50,699 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 50,777 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டு வர்த்தகமாகிக் கொண்டுள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 741 ரூபாய் அதிகரித்து, 61,606 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையினை பொறுத்த வரையில் வெள்ளிக்கிழமையன்று 60,865 ரூபாயாக முடிவுற்றிருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 61,422 ரூபாயாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது. அதோடு சீனாவின் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு சாதகமாக வந்துள்ள நிலையில் வெள்ளியில் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய கால நோக்கில் தங்கம் விலை

குறுகிய கால நோக்கில் தங்கம் விலை

குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும், நாளை மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிகழ்வான, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதுமட்டும் அல்ல அமெரிக்காவின் வட்டி வீதம் முடிவு மற்றும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் உட்பட்ட சில முக்கிய தரவுத் தொகுப்புகளும் வரவுள்ளன. இதனால் தங்கம் விலையானது பெரும் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

நீண்டகால நோக்கில் எந்த காரணிகளும் மாறவில்லை

நீண்டகால நோக்கில் எந்த காரணிகளும் மாறவில்லை

ஆய்வாளர்களின் கருத்துப்படி தங்கம் விலையானது பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருவதால் வரும் வாரத்தில் முதலீட்டாளர்கள் பட்டியலில் குறைவான இடத்தினையே பிடிக்கலாம். இதனால் தங்கம் விலை குறையலாம். குறையாவிட்டாலும், அதிக மாற்றம் இல்லாமல் காணப்படலாம். ஆனால் அதிக ஏற்றம் காணுமா? என்பது சந்தேகம் தான். எனினும் நீண்டகால நோக்கிலான காரணிகள் எதுவும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் ஊக்கத்தொகை

நிச்சயம் ஊக்கத்தொகை

அதிலும் வரவிருக்கும் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உண்மையான வர்த்தக நாட்களாக இருக்கும். யார் தேர்தலில் ஜெயித்தாலும், சந்தையில் குறிப்பிடத்தக்க ஊக்கத் தொகை தொகுப்பு நிச்சயம் இருக்கும். அப்படி வரும் போது தங்கம் விலை மிக நேர்த்தியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்த தொகை எவ்வளவு வரும் வட்டி வீதம் எவ்வளவு இருக்கும் என்பதை பொறுத்து சந்தையில் மாற்றம் இருக்கலாம்.

ஏற்ற இறக்கம் அதிகமாகலாம்

ஏற்ற இறக்கம் அதிகமாகலாம்

இதே மற்றொரு அறிக்கையில், நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு பின்பு, அவுன்ஸூக்கு 2000 டாலர்களை கூட தொடலாம். 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் 2500 டாலர்களை கூட தொடலாம் என்றும் வால்ஷ் டிரேடிங் இணை இயக்குனர் சீன் லஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை ஆதரிக்கும் காரணிகள்

தங்கம் விலையை ஆதரிக்கும் காரணிகள்

தற்போது அமெரிக்கா மற்றும், ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் லாக்டவுன் இருக்குமோ என்ற பயமும் எழுந்துள்ளது. இது மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தேர்தலுக்கு பின்பும் தங்கம் விலையை, இவையெல்லாம் ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பின் கவனிக்க வேன்டியவை

தேர்தலுக்கு பின் கவனிக்க வேன்டியவை

தேர்தலே முடிவடைந்தாலும், அடுத்து வரும் வியாழக்கிழமையன்று ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து வேலையின்மை குறித்த டேட்டாவும் வெளியாக உள்ளது. ஆக இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தற்போது தங்கத்தினை வாங்கி வைக்கலாம்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ள இந்த நிலையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இன்றி காணப்படுகிறது. மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு 0.09% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் அழுத்தினை கொடுத்து வருகிறது என்றாலும்., நாளை நடக்கவிருக்கும் தேர்தல், வரவிருக்கும் மானிட்டரி பாலிசி இவற்றை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels

பைவோட் பாயிண்ட் - 1877.34

சப்போர்ட் லெவல்கள் - 1864.95, 1852.05, 1826.76

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 1890.24, 1902.63, 1927.92

Intraday levels

பைவோட் பாயிண்ட் - 50,640

சப்போர்ட் லெவல்கள் - 50,411, 50,123, 49,606

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,928, 51,157, 51,674

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 50,631

சப்போர்ட் லெவல்கள் - 50,137, 49576, 48,521

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,192, 51,686, 52,741

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels

பைவோட் பாயிண்ட் - 60,703

சப்போர்ட் லெவல்கள் - 60,080, 59,295, 57,887

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 61,488, 62,111, 63,519

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 60,608

சப்போர்ட் லெவல்கள் - 58,637, 56,409, 52,210

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,836, 64,807, 69,006

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall in first day in this week

Gold price update.. Gold prices fall in first day in this week
Story first published: Monday, November 2, 2020, 11:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X