தங்கம் விலையானது தொடர்ச்சியாக கடந்த நான்கு அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இதில் இன்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது.
இது தங்கத்தில் முதலீடு செய்யும் வர்த்தகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் பொதுவாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையினை பொறுத்தே இந்திய எம்சிஎக்ஸ் சந்தையிலும் இருக்கும்.
உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் உலக நாடுகள், தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டில் மீண்டும் தங்கத்தில் முதலீடுகளை குவிக்க ஆரம்பித்துள்ளனர். இது தங்கத்திற்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றது. எனினும் இந்திய சந்தையில் விலை குறைந்துள்ளது புராபிட் புக்கிங் காரணமாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்து வரும் கொரோனா தாக்கம்
ஏனெனில் கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது குறைந்து வருகின்றது. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டும் வரும் பட்சத்தில், பொருளாதார வளர்ச்சியானது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு விரைவில் திரும்பும். அதோடு தேவையும் மீண்டு வரும் என்ற நம்பிக்கையானது துளிர் விடத் தொடங்கியுள்ளது.
காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலை 3.55 டாலர்கள் அதிகரித்து 1871.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவில் 1869.55 டாலர்களாக முடிவடைந்த தங்கம் விலையானது, இன்று காலை தொடக்கத்திலேயே 1869.35 டாலராக தொடங்கியது. எனினும் நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது.
காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டு இருந்தாலும், வெள்ளி விலையானது பலமான ஏற்றத்தினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 1.15% அதிகரித்து, 28.595 டாலர்களாக கானப்படுகிறது. வெள்லி விலையானது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் பலமான ஏற்றத்திற்கு பிரகு, இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 109 ரூபாய் குறைந்து, 48,365 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது.ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இன்று கிலோவுக்கு 476 ரூபாய் அதிகரித்து, 73,800 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது 28 ரூபாய் அதிகரித்து, 4,483 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து 36,664 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களாக தங்கம் விலையானது அதிகரித்து வருகின்றது.
24 கேரட் தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 31 ரூபாய் அதிகரித்து, 5,000 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து 40,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையினை பொறுத்தவரையில் கடந்த 4 தினங்களில் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும், இரண்டு நாட்கள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. இன்றும் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கிராமுக்கு 76.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 76,800 ரூபாயாகவும் காணப்படுகிறது.
பணவீக்கம் பற்றிய அச்சம்
தற்போது உலகின் பல நாடுகளிலும் வட்டி விகிதம் குறைவாகவே உள்ள நிலையில், பணவீக்கம் பற்றிய அச்சம் எழுத்துள்ளது. இது தங்கத்திற்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. ஏனெனில் இன்றைய காலகட்டத்திலும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படுகிறது.
Array
தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், இன்னும் பையிங் டிரெண்டிலேயே தான் உள்ளது. ஆக இன்னும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 1880 டாலர்களாகும். அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 1928 டாலர்களாகும். சப்போர்ட் லெவல்கள் 1810 டாலர்களாகும்.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் குறைந்த விலையில் வாங்கும்போது இன்னும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு இந்திய சந்தையில் ஜூன் காண்டிராக்ட் ஜூன் 5ல் எக்ஸ்பெய்ரி என்பதால், அதனையும் கவனித்து முதலீடு செய்வது நல்லது.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications