காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்.. இப்போது வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பெண்களின் ஆசைகளில் மிகப்பெரிய ஆசையே தங்கம் வாங்குவது தான். இன்றைய காலகட்டத்தில் அதுதான் ஒருவரின் மரியாதையை கூட கூட்டுகிறது எனலாம்.

ஒரு விழாவோ அல்லது கூட்டத்திற்கு செல்லும்போது, ஒருவர் அணிந்துள்ள ஆபரணம், அவரின் தோற்றத்தினை மட்டும் அல்ல, அவரை சமுதாயத்தில் உயர்ந்த அஸ்தஸ்த்தில் உள்ளார் என்ற தோரணையை உருவாக்குகிறது.

ஆக இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தோடு ஒன்றியிருக்கும் தங்கமானது, வாங்க வாங்க திகட்டாத ஒரு பொருளும் கூட.

அதிகரித்து வரும் தங்கம் முதலீடுகள்

அதிகரித்து வரும் தங்கம் முதலீடுகள்

நாட்டில் தங்கத்தினை விட பல சிறந்த முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்களின் பெரும்பான்மையான ஆப்சன் தங்கம் தான். அதுவும் செய்கூலி சேதாரம் அதிகமாக இருந்தாலும், பிசிகல் தங்கமாக வாங்கி வைப்பது அதிகம். எனினும் தற்போது தான் அது கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது. மாற்றாக பேப்பர் தங்கம் என்று அழைக்கப்படும் காமாட்டிட்டி சந்தை, தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், கோல்டு இடிஎஃப் என பலவகையிலும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

தங்கம் விலையினை கவனித்து வருகின்றனர்

தங்கம் விலையினை கவனித்து வருகின்றனர்

இதன் மூலம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு லாபம் பார்த்து பழகிக் கொண்டுள்ள முதலீட்டாளர்கள், தங்கம் விலையினை கூர்மையாக கவனித்து வருகின்றனர். அதிலும் கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, ஏற்றத்திலும் சரி, சரிவிலும் சரி லாபத்தினை பார்க்க முடியும் என்பதால் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நகையாக வாங்கி வைப்பதால் எந்த பயனும் இல்லை

நகையாக வாங்கி வைப்பதால் எந்த பயனும் இல்லை

அதோடு இங்கு செய்கூலி, சேதாரம் என்பதும் இல்லை. தங்கத்தினை நகையாக வாங்கி வைப்பதால் லாபமுமில்லை. ஆனால் இது அஸ்தஸ்த்தின் சின்னமாக இருப்பதால் இதன் மவுசு எப்போதும் குறைவதில்லை. சரி இன்று காலை நேர வர்த்தகத்திலேயே தங்கம் விலை குறைய ஆரம்பித்துள்ளதே. என்ன காரணம்.

டாலரின் வலிமை

டாலரின் வலிமை

கடந்த சில தினங்களாகவே தடுமாறி வரும் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையில் இன்றும் காலை நேர வர்த்தகத்திலேயே சரிவிலேயே காணப்படுகிறது. இதற்கு டாலரின் வலிமை தான் முக்கிய காரணமாக உள்ளது. மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் குறியீடு 0.45% அதிகரித்துள்ளது. இதுவும் காலை நேரத்திலேயே தங்கம் விலையானது குறைய காரணமாக அமைந்துள்ளது.

சர்வதேச பங்கு சந்தைகள் நிலவரம்

சர்வதேச பங்கு சந்தைகள் நிலவரம்

கடந்த வாரம் அமெரிக்காவின் தொழில் நுட்ப பங்குகள் சரிந்த பின்னர், தற்போது மீண்டும் ஆசிய பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. இது தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகை செய்துள்ளது. ஆசிய சந்தைகளான Nikkei, straits times, Taiwan weighted, kopsi, Jakarta composite உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் உள்ளன. சில குறியீடுகள் சரிவில் காணப்பட்டாலும், பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

தங்கத்தினை ஆதரிக்கலாம்

தங்கத்தினை ஆதரிக்கலாம்

எனினும் தங்கம் விலையானது குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம், அதோடு உலகம் முழுக்க அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் மேலும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இவற்றோடு, அதிகரித்து வரும் அமெரிக்கா சீன பதற்றங்கள் தங்கத்தின் விலையினை ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் பார்க்கும் போது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் சீன அமெரிக்க பதற்றம்

அதிகரிக்கும் சீன அமெரிக்க பதற்றம்

சீனாவின் மிகப்பெரிய சிப் உற்பத்தியாளரான எஸ் எம் ஐ சி நிறுவனம் மீது, அமெரிக்கா தடை விதிக்க ஆராய்ந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது அமெரிக்கா சீனா பிரச்சனையை மேலும் அதிகரிக்க கூடும். ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையக்கூடும்.

பலவீனமான தேவை

பலவீனமான தேவை

தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோரான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தின் தேவையானது மிக பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக விற்பனை என்பது பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக பிசிகல் தங்கத்தின் தேவை மிக பலவீனமாகவே உள்ளது. இதன் காரணமாக உற்பத்தியாளர்கள் நிறைய தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். எனினும் கூட தங்கம் விற்பனையானது அதிகரிக்கவில்லை.

தங்கம் விலை பலவீனமாக மாறலாம்

தங்கம் விலை பலவீனமாக மாறலாம்

அமெரிக்கா டாலரின் மதிப்பு மற்றும் பங்கு சந்தை ஏற்றம் தங்கத்தின் விலையினை பலவீனமானதாக உள்ளது என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. எனினும் நிபுணர் உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியான சவால்களுக்கு மத்தியில் தான் உள்ளது. ஆக தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

பணவீக்கம் VS தங்கம்

பணவீக்கம் VS தங்கம்

பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில், அதனை மீட்டெடுக்க மத்திய வங்கிகளிடமிருந்து பரவலான தூண்டுதல் தொகுப்புகள் இருந்து வருகின்றன. இது பணவீக்கம் மற்றும் நாணய வீழ்ச்சிக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவும் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை ஆதரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே, தொடர்ச்சியாக சற்று சரிவினைக் கண்டு வருகிறது. எனினும் அது பெரியளவில் மாற்றம் காணவில்லை. தற்போது அவுன்ஸ் தங்கம் விலையானது 3.25 டாலர்கள் குறைந்து, 1931 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.17% வீழ்ச்சி கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல பெரியளவில் மாற்றம் காணவில்லை. தற்போது அவுன்ஸுக்கு 0.215 டாலர்கள் அதிகரித்து 26.925 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.79% அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொழில் துறையானது வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வெள்ளிக்கான தேவை அதிகரிக்க கூடும்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொருத்த வரையில் தங்கம் விலையானது, திங்கட்கிழமையன்று சற்று ஏற்றம் கண்டிருந்த நிலையில், தற்போது 10 கிராமுக்கு 207 ரூபாய் குறைந்து காணப்படுகிறது. தற்போது 50,855 ரூபாயாக குறைந்து வர்த்தமகாகி வருகிறது. இது 0.42% வீழ்ச்சியாகும்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல பெரியளவில் மாற்றம் காணவில்லை. தற்போது அவுன்ஸுக்கு 0.215 டாலர்கள் அதிகரித்து 26.925 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.79% அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொழில் துறையானது வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வெள்ளிக்கான தேவை அதிகரிக்க கூடும்.

 அடுத்த டார்கெட்

அடுத்த டார்கெட்

தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இதம் அடுத்த சப்போர்ட் லெவல் 50,800 ரூபாய், 50,660 ரூபாய், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 51,200 - 51.440 எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே டாலரில் அடுத்த சப்போர்ட் லெவல் 1910 - 1900 டாலர்களாகும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1944 - 1958 டாலர்கள் என பிரித்வி பின்மார்ட் காமடிட்டி ஆய்வாளர் கணித்துள்ளார். தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம். அது நிச்சயம் லாபகரமானதாக இருக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறியதை போல, தங்கம் விலையானது, குறையும் போது நிச்சயம் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall in Morning session amid dollar strength

Gold price update.. Gold and silver prices fall in morning session.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X