வாவ்.. இது ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் மீதான மோகமானது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அதோடு நிபுணர்களும் இன்னும் அதிகரிக்கும் என்று தான் கூறி வருகின்றனர்.

 

ஆக எப்போதெல்லாம் தங்கம் விலை குறைகிறதோ, அப்போதெல்லாம் வாங்கி லாபம் பார்த்து வருகின்றனர் முதலீட்டாளர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இது ஜாக்பாட் தான். ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு தான் தங்கம் விலையானது மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலையானது வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

இந்த வீழ்ச்சி நிலையானது இல்லையெனிலும், தங்கம் விலையானது குறையும் அளவுக்கு நல்லது தானே. ஏனெனில் குறைந்த விலையில் வாங்க முடியுமே. ஆக தங்கத்தினை நகையாக மட்டும் தான் வாங்க வேண்டுமா? என்ன? இப்படியும் வாங்கி லாபம் பார்க்க முடியுமே. அதிலும் கமாடிட்டி சந்தையில் வாங்கி விற்பனை செய்யும் போது குறைந்த கட்டணம் மட்டுமே.

அதிகரிக்கும் முதலீடு

அதிகரிக்கும் முதலீடு

இதுவே நீங்கள் பிசிகல் தங்கமாகவோ அல்லது ஆபரணமாகவோ வாங்கி வைக்கும் போது செய்கூலி மற்றும் சேதாரம் எல்லாம் இதில் கூடுதலாக இருக்கும். இதனால் நாளுக்கு நாள் பேப்பர் தங்கம் என்று கூறப்படும் கமாடிட்டி முதலீடு, தங்கம் இடிஎஃப் மற்றும் தங்கம் ஃபண்டுகளில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் மக்கள் அவ்வப்போது கிடைக்கும் லாபத்தினையும் பார்த்து வருகின்றனர்.

தங்கம் விலை அதிகரிக்கும்
 

தங்கம் விலை அதிகரிக்கும்

இந்த நிலையில் நிபுணர்கள் மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் அவுன்ஸூக்கு 1786.50 டாலர் என்பது வலுவான சப்போர்ட் லெவலாக பார்க்கப்படுகிறது. மேலும் 1780 டாலர் என்பது முந்தைய வாரத்தில் உச்ச விலையாகவும் உள்ளது. ஆக தங்கம் விலையானது இதே நிலையில் இருக்கும் பட்சத்தில் விரைவில் 1800 டாலர்களை தொடும் என்றும் கூறுகின்றனர்.

ஏற்றம் காணும்

ஏற்றம் காணும்

ஆக இன்று தற்போதைய நிலையில் தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், இன்னும் அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகிறது. இது எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது விரைவில் 50,000 ரூபாயினை தொடும் என்கிறார்கள் நிபுணர்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி காணுமே என்ற உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.

பணி நீக்கமும் அதிகரித்து வருகிறது

பணி நீக்கமும் அதிகரித்து வருகிறது

அதோடு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு விகிதமானது அதிகரித்தாலும், பணி நீக்கமும் அதிகரித்து வருவதாக ஒர் அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு, அமெரிக்காவின் ஃஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்கா பொருளாதாரம் எதிர்பாராத அளவு வளர்ச்சி கட்டத்தினை எட்டியுள்ளது. ஆனால் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அமெரிக்காவில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அது நிச்சயமற்றது என்றும் எச்சரித்துள்ளார்.

இன்னும் விலை அதிகரிக்கலாம்

இன்னும் விலை அதிகரிக்கலாம்

ஆக இதனால் மேற்கொண்டு பொருளாதாரம் சரிந்தால், சந்தை வீழ்ச்சி காணுமே என்ற பதற்றத்தினால், மீண்டும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று இல்லாவிட்டாலும் அடுத்த வாரத்தில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது.

விரைவில் தடுப்பு மருந்து வரலாம்

விரைவில் தடுப்பு மருந்து வரலாம்

எனினும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் விரைவில் சாதகமான நிலையை எட்டலாம் என்ற எதிர்பார்ப்பும் பலமாக இருந்து வருகிறது. ஆக அதில் ஏதேனும் சாதகமான நிலை ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தின் விலையில் பெரியளவில் திருப்பம் ஏற்படலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று குறைந்து வருகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 3.35 டாலர்கள் குறைந்து, 1786.35 டாலர்களாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த மாத உச்சமான 1804 டாலரினை உடைத்து செல்லும் போது, கோல்டுமேன் சாச்ஸ் கூறுவது போல் 2000 டாலரை எளிதில் தொட்டுவிடும்போல.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது இன்று காலையில் தொடக்கத்தில் இருந்தே சற்று குறைந்து காணப்படுகிறது. இது தற்போது 0.049 டாலர்கள் குறைந்து, 18.273 டாலர்களாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது 0.25% வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் நீண்ட கால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது சந்தை தொடக்கத்தில், 113 ரூபாய் குறைந்து, 48,045 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.24% ஆகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலையானது மூன்றாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று சந்தை தொடக்கத்தில் 146 ரூபாய் குறைந்து கிலோ வெள்ளியின் விலையானது, 49,058 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இது கிட்டதட்ட 0.30% வீழ்ச்சியாகும்.

தங்கம் விலை

தங்கம் விலை

இன்று இதுவரையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலையானது மாற்றம் காணாத நிலையில், வியாழக்கிழமையன்று விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நேற்று 328 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது கவனிக்கதக்கது. இது கிராமுக்கு 4,633 ரூபாயாகவும் இதே சவரன் விலை 37,064 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி ஆபணத்தில் விலையானது இன்று இதுவரையில் மாற்றம் காணாத நிலையில், வியாழக்கிழமையன்று கிலோவுக்கு 1450 ரூபாய் குறைந்துள்ளது. இது கிராமுக்கு 48.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 48,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall in second day in a row

Gold price update.. Gold and silver rates are falls in comex market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X