Gold price today: தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பால் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது.
வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற கருத்துகளே நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது 10 கிராமுக்கு 50,280 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த வாரத்தில் 10 கிராமுக்கு 1719 ரூபாய் அல்லது 3.30% சரிவில் காணப்பட்டது. இதே சர்வதேச சந்தையில் 1.33% குறைந்து 1643 டாலர் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.
முதலீடுகள் குறையலாம்
கமாடிட்டி நிபுணர்கள், அதிகரித்து வரும் டாலரின் மதிப்பால், தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நுகர்வோர் விலை குறையீடானது சற்றே மீண்டும் அதிகரித்த நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் சரிவது குறைந்தது. எனினும் தொடர்ந்து டாலரின் மதிப்பு அதிகரித்தால், அது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.
விலை எப்படியிருக்கும்
அதோடு டாலரின் மதிப்பில் தங்கத்தினை வாங்குவதும் குறையலாம். இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1640 - 1700 டாலர்கள் என்ற லெவலிலேயே இருக்கலாம். ஒரு வேளை தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1640 டாலர்களை உடைத்தால், 1600 டாலர்கள் என்ற லெவலை எட்டலாம்.
இந்தியாவில் எப்படியிருக்கும்?
ஸ்பாட் கோல்டின் விலையானது 1600 டாலர்கள் என்ற லெவலை உடைக்கும் பட்சத்தில், இந்திய சந்தையில் தீபாவளி வரையில் 10 கிராமுக்கு 50,200 - 51,500 என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோதிலால் ஆஸ்வால் அறிக்கையின் படி, தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பால் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இனி நவம்பர் 2 அன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும், 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைடுவேயாக போகலாம்
அதேசமயம் அமெரிக்க நிபுணர்கள் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளனர். இது குறித்த கவலையும் எழுப்பி வருகின்றனர்.
எனினும் பல நிபுணர்களும் தங்கம் விலையானது தீபாவளி வரையில் சைடுவேயாக போகலாம் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது 49,300 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கின்றனர்.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4690 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 37,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு, 5116 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40,928 ரூபாயாகவும், 10 கிராமுக்கு, 51,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 5.20 ரூபாய் குறைந்து, 55.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 553 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 5200 ரூபாய் குறைந்து, 55,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications