வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
இதே சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமில்லை. எனினும் சற்று சரிவினைக் காணும் விதமாக காணப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களில் 10 கிராம் தங்கம் விலையானது, 950 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே வெள்ளியின் விலை கிலோவுக்கு 2.5% குறைந்து, 1800 ரூபாய் குறைந்துள்ளது.
Comex தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.35 டாலர்கள் அதிகரித்து, 1874.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
Comex வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.07% அதிகரித்து, 27.497 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
MCX தங்கம் விலை
இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து, 48,635 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மிடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்தே வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.
MCX வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 142 ரூபாய் குறைந்து, 70,668 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், தற்போது கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, 4,585 ரூபாயாகவும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 36,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரணத் தங்கம் விலை தொடர்ச்சியாக 6 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
தூய தங்கத்தின் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து, 5,000 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,000 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு பிறகு, இன்று சரிவினைக் கண்டுள்ளது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 75.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 2,000 ரூபாய் குறைந்து, 75,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது நேற்று சற்று அதிகரித்திருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
Array
வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திர லாபமானது, தங்கத்தின் விலையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தங்க வர்த்தகர்கள், பண்ணை அல்லாத சம்பள பட்டியல் விகிதம் இன்று வெளியாகவுள்ள நிலையில் அதுகுறித்து காத்துக் கொண்டுள்ளனர். இதன் தாக்கம் சந்தையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணிகள்
அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்தான க்ளைம் விகிதமானது, கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக 4 லட்சத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இதுவும் டாலரின் மதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் பணவீக்கம் பற்றிய கவலைகள், அமெரிக்காவின் பத்திர லாபம், அமெரிக்க டாலரின் மதிப்பு, கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் இது பொருளாதார வளர்ச்சி குறித்தான சாதகமாக அறிக்கைகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த ஹெட்ஜிங்
கடந்த ஆண்டு இந்திய சந்தையில் தங்கம் விலையானது 56,200 தொட்ட நிலையில், அதன் பிறகு ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. எப்படி இருப்பினும் வரவிருக்கும் காலத்தில் பணவீக்கம் மற்றும் கொரோனா தாக்கம் குறைவு என்பது சந்தைக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் முக்கிய லெவல்
தங்கம் விலையானது இன்று சரிந்துள்ள நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் இது இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால முதலீட்டாளார்கள் வாங்கலாம். எனினும் குறைந்த விலையில் வாங்கினால் லாபம் சற்று கூடுதலாக கிடைக்கும்.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது இன்று சரிந்துள்ள நிலையில், மீடியம் டெர் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் இது இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால முதலீட்டாளார்கள் வாங்கலாம். எனினும் குறைந்த விலையில் வாங்கினால் லாபம் சற்று கூடுதலாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications