சூப்பர் சரிவில் தங்கம்.. 4வது நாளாக முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் அவ்வப்போது ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தாலும், தங்கம் விலையானது சரியும் போது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுகிறது.

ஏனெனில் குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க முடியுமே. அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் நம் உணர்வுகளோடு கலந்துள்ள தங்கத்தினை, குறைந்த விலையில் வாங்குவதனை தவிர வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்.

பொதுவாக தங்கம் வாங்குவது மகிழ்ச்சியான விஷயமாக கருதப்பட்டாலும், குறைந்த விலையில் வாங்குவது இன்னும் மகிழ்ச்சியாக கருதப்படுகிறது. ஒன்று இது அந்தஸ்த்தின் ஒரு சின்னமாக பார்க்கப்பட்டாலும், நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவும் ஒரு நண்பனாகவும் உள்ளது.

இன்று இதெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று இதெல்லாம் பார்க்கபோகிறோம்?


இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? இனி விலை குறையுமா? கூடுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று பலவீனமாக உள்ளது. அமெரிக்காவில் வேலையினை நலன் குறித்தான தரவு சாதகமாக வந்துள்ளது. எனினும் ஊக்கத்தொகையாக வெறும் 600 டாலர்கள் போதாது, அமெரிக்கர்கள் ஒவ்வொருக்கும் 2000 டாலர்கள் வேண்டும் என்று டிரம்ப் கூறியதையடுத்து, இது நடைமுறைக்கு சாத்தியமா? தற்போதைக்கு இந்த தொகை கிடைக்குமா என்ற பதற்றமான நிலையே நிலவி வருகின்றது. இதனால் டாலரின் மதிப்பு சற்று பலவீனமாகவே காணப்படுகிறது.

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் 23% அதிகமாக லாபம் கொடுத்துள்ளது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுவதால், தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் மிகபெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. அதோடு தங்கம் விலையானது சிறந்த பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால், தங்கம் விலையானது நல்ல ஏற்றத்தினை கண்டது.

ஒவ்வொருவருக்கும் $2000 வேண்டும்

ஒவ்வொருவருக்கும் $2000 வேண்டும்

கடந்த செவ்வாய்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 2000 டாலர்களை கொடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் கோரியுள்ளார். இதனால் அதிகாரிகள் இந்த மசோதாவை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 600 டாலர்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கிற்கு மேல் அதிகம்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், பிரிட்டனில் அதிகரித்து வரும் புதிய கொரோனா பரவல் காரணமாக மீண்டும் அந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது பயணக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகள் இதனால் தங்களது எல்லைகளை மூடியுள்ளன.

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை

இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகிறது. எனினும் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதம் 49,900 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தங்கம் விலையை ஊக்கப்படுத்தும் விதமாக டாலரின் மதிப்பு சற்று சரிந்துள்ள காரணத்தால், இது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது பல்வேறு காரணங்களினால் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.85 டாலர்கள் அதிகரித்து, 1879.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவில் 1878.10 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1876.85 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது தவிர தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், சற்று சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக இன்று சரிய ஆரம்பித்துள்ளது. வெள்ளியின் தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில் இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதற்கிடையில் வெள்ளியின் விலை தற்போது அவுன்ஸுக்கு 0.05% அதிகரித்து 25.933 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும்,
தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 53 ரூபாய் குறைந்து, 50,096 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 6,000 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய காமடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் தான் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது தற்போது கிலோவுக்கு 18 ரூபாய் அதிகரித்து, 67,594 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 77,700 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,000 ரூபாய்க்கு மேல் குறைவாகத் தான் உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் இது வாங்க சரியான நேரம் தான்.

நிபுணர்களின் கணிப்பு எவ்வளவு?

நிபுணர்களின் கணிப்பு எவ்வளவு?

தங்கம் விலையானது சரியும் பட்சத்தில் இது மீண்டும் 49,920 - 49,700 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 50,330 - 50,600 ரூபாயாகும்.

வெள்ளியின் சப்போர்ட் லெவல்கள், 66,800 - 66,100 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 68,200 - 69,100 ரூபாயாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices fall sharply in fourth day on MCX

Gold price update.. Gold prices fall sharply in fourth day on MCX
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X