மூன்றாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்தது. எனினும் தற்போது கொரோனாவிற்கு தான் தடுப்பூசிகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே? இனியாவது குறையுமா? இப்போது முதலீடு செய்யலாமா? தங்கத்தினை இப்போது வாங்கி வைக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக தங்கம் விலையானது பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு தலைகீழாக இருக்கும் என்பார்கள். ஆக எப்போதெல்லாம் பங்கு சந்தை வீழ்கின்றதோ? அப்போதெல்லாம் தங்கம் விலை அதிகரிக்கும். ஏனெனில் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைவதால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுகளை பாதுகாக்கும் விதமாக தங்கத்தினை நோக்கி நகர்வார்கள்.

அந்த வகையில் சர்வதேச பங்கு சந்தைகள் மற்றும் இந்திய பங்குகள் சந்தை என அனைத்தும் ஏற்றத்தினைக் கண்டு வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் சரிவில் காணப்படுகிறது. ஆனால் தங்கம் விலை சரிவுக்கு இதுமட்டும் காரணம் அல்ல? இன்னும் பலவும் உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சரி வாருங்கள் பார்க்கலாம். என்னென்ன காரணங்கள் தங்கத்தின் விலை சரிய காரணமாக உள்ளன என்று.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன விலை? இனி விலை குறையுமா? கூடுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், அடுத்த சப்போர்ட் அன்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பு, இன்று சற்று வலுவடைந்துள்ள நிலையில் தங்கம் விலையானது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் எதிர்பார்ப்பினை விட சிறப்பாக வலுவடைந்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விலை உயர்ந்த ஆபரணங்களின் விலையில் எதிரொலித்துள்ளது.

புதிய கொரோனா பரவல்

புதிய கொரோனா பரவல்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது பயணக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

நம்பிக்கை கொடுத்த ஊக்கத்தொகை

நம்பிக்கை கொடுத்த ஊக்கத்தொகை

எனினும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க, 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த புதிய மீட்பு நடவடிக்கை தொடர்பாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடையே பேச்சுவார்த்தை ஒரு சூமுக நிலையை எட்டியுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. புதிய கொரோனா பரவலே இருந்து வந்தாலும், இந்த பிரச்சனையில் இருந்து பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்றத்தில் பங்கு சந்தைகள்

ஏற்றத்தில் பங்கு சந்தைகள்

அதோடு அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், லாக்டவுன் எதிர்பார்ப்பு, கடுமையான நடவடிக்கைகள் என பல பிரச்சனைகள் சந்தைக்கு எதிராக இருந்தாலும், ஊக்கத் தொகை ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக குறைய ஆரம்பித்துள்ளது.

லாக்டவுன் அச்சம்

லாக்டவுன் அச்சம்

எனினும் புதிய கொரோனா பரவல் காரணமாக பல சர்வதேச நாடுகள் லாக்டவுனை அமல்படுத்துமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினைக் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காண தொடங்கியுள்ளது. இன்று காலையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்ட தங்கம் விலையானது, தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், எவ்வளவு குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து 1870 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவில் 1882.80 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1868.60 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது தவிர தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இது தங்கம் விலை சரியும் என்பதனையே சுட்டிக் காட்டுகிறது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக இன்று சரிய ஆரம்பித்துள்ளது. வெள்ளியின் தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில் இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வெள்ளியின் விலை தற்போது அவுன்ஸுக்கு 0.29% குறைந்து 25.460 டாலர்களாக காணப்படுகிறது.

தங்கத்தில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன்

தங்கத்தில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும், தங்கத்தின் தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இது தங்கம் விலை சரியும் என்பதனையே சுட்டிக் காட்டுகிறது. இதற்கிடையில் இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலையானது இன்றும் சரிய ஆரம்பித்துள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 73 ரூபாய் குறைந்து, 50,008 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 6,100 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க நல்ல நேரமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இண்டிராடே வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது.

இது வாங்க சரியான நேரமா?

இது வாங்க சரியான நேரமா?

தற்போது பலரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி, தட்டு தடுமாறி வரும் தங்கத்தினை தற்போது வாங்கலாமா? என்பது தான். ஏனெனில் சில காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் தற்போது வாங்கலாமா? தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக தங்கம் விலையானது சரிவினை கண்டு வருகின்றது. இது டெக்னிக்கலாக இன்னும் சரிவினைக் காணும் விதமாக காணப்படுவதால், முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

நிபுணர்களின் கணிப்பு எவ்வளவு?

நிபுணர்களின் கணிப்பு எவ்வளவு?

தங்கம் விலையானது 50,000 ரூபாய்க்கு கீழாக உடைத்து சென்றால் இது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. அப்படி சரியும் பட்சத்தில் இது மீண்டும் 49,800 - 49,500 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 50,300 - 50,500 ரூபாயாகும்.

வெள்ளியின் விலையானது 67,000 ரூபாயினை உடைத்து சென்றால், அடுத்து 66,400 - 65,600 ரூபாபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 67,700 - 68,600 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices fall sharply in third day, silver rates also tumble in MCX

Gold price update.. gold prices fall sharply in third day, silver rates also tumble in MCX
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X