தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது மூன்றாவது நாளாக சர்வதேச சந்தையிலும், இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்திலேயே வர்த்தகமாகி வருகின்றது. கடந்த வாரத்தில் வார இறுதியில் விலை சரிந்து காணப்பட்டாலும், வாரத்தின் முதல் பாதியில் பலமான ஏற்றம் கண்டது. எனினும் இந்த வார தொடக்கத்திலேயே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் உள்ளது கவனிக்கதக்கது.

அதெல்லாம் சரி, தற்போது சரிவில் தொடங்கியிருக்கும் தங்கம் விலை இன்னும் சரியுமா? அல்லது இது இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து எப்படி இருக்கும். தற்போது தங்கத்தினை வாங்கலாமா? வேண்டாமா?

குறிப்பாக இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இன்று குறையுமா? அல்லது அதிகரிக்குமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். தங்கத்திற்கு சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்திற்கு ஆதரவு காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவு காரணிகள்

தங்கம் விலையானது இந்திய சந்தையானலும் சரி, சர்வதேச சந்தையிலும் விலையானது மூன்றாவது நாளாகவே சற்று தடுமாற்றத்தில் தான் உள்ளது. அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலை சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் தங்கத்தின் அடுத்த முக்கிய லெவல் 49,800 ரூபாய் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பங்கு சந்தைகள்

பங்கு சந்தைகள்

சர்வதேச சந்தைகள் அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான முக்கிய அறிவிப்புகள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பி வருகின்றன. இது டாலருக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலை சரிய ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் தங்கத்தில் முதலீடுகளை குறைக்க இது ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

Array

Array

அமெரிக்காவில் ஊக்கத்தொகை அறிவிப்புகள் விரைவில் நடைமுறைக்கு வந்தால், அது டாலரின் மதிப்பினையும் வலுவடைய வைக்கும். இதன் காரணமாக பணப்புழக்கம் அதிகரிக்கும். இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர காரணமாக அமையும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது, வட்டி விகிதத்தினை இன்னும் பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே வைத்துள்ளது. இது இன்னும் சிறிது காலத்திற்கு மாற்றம் இருக்காது என்றும் நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

இதற்கிடையில் வரவிருக்கும் புதன்கிழமையன்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக வட்டி விகிதம் குறித்து ஏதேனும் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. அதோடு அமெரிக்காவின் ஜிடிபி டேட்டா, வியாழக்கிழமையன்று வேலையின்மை நலன் குறித்தான டேட்டா என பலவும் வரவிருக்குகின்றன. இதன் காரணமாக சந்தை பெரிய மாற்றத்தினை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய பங்கு சந்தைகள்

ஆசிய பங்கு சந்தைகள்

அமெரிக்க சந்தையின் எதிரொலியாக ஆசிய பங்கு சந்தைகளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. இதுவும் தங்கம் விலைக்கு எதிராகவே உள்ளது. இந்திய சந்தையினை பொறுத்த வரையில் பிப்ரவரி 5 அன்று தங்கத்தின் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யலாம். கிடைத்த லாபத்தினை புக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் சீனாவில் புத்தாண்டு நெருங்கி வருவதால், அங்கு தங்கத்தின் தேவையை இது ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவிலும் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தோடு தங்கம் விலையை ஒப்பிடும்போது சுமார் 7000 ரூபாய்க்கு மேல் குறைவாக இருப்பதால், இதுவும் முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் குறைந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையில் அந்தளவுக்கு எதிரொலிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து இன்றோடு மூன்றாவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 5.25 டாலர்கள் குறைந்து, 1830.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

தங்கம் விலையானது பலத்த சரிவினை கண்டிருந்தாலும், வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 0.12% ஏற்றம் கண்டு, 25.590 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் சந்தையானது, இன்று காலை நேர வர்த்தகத்தில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 147 ரூபாய் குறைந்து, 48,993 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தொடங்கியிருந்தாலும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று குறைந்தே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு பெரியளவில் மாற்றமின்றி 29 ரூபாய் அதிகரித்து, 66,671 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் முக்கிய லெவலாக 49800 என்ற லெவல் கருதப்படும் நிலையில், அந்த லெவலுக்கு வரும்போது வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த வாரத்தில் முக்கிய டேட்டாக்கள், மாத இறுதி, காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி, இந்தியாவில் வரவிருக்கும் பட்ஜெட் என பல காரணங்கள் உள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall sharply, silver rates edge higher

Gold price update... Gold prices fall sharply, silver rates edge higher
Story first published: Monday, January 25, 2021, 12:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X