சரிவில் தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான சான்ஸ் தான்.. இன்னும் குறையுமா..!

தங்கம் விலை குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும் என்று நினைத்தவர்களுக்கெல்லாம், இது ஒரு நல்ல விஷயம் தான்.

அது தங்கம் விலை குறைவு என்பது தான். அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது தொடர்ச்சியான ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? இன்னும் எவ்வளவு குறையும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், வாருங்கள் பார்க்கலாம்.

ஆபரணத் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு தினங்களாகவே சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,710 ரூபாயாக காணப்படுகிறது, இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 37,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை விலையினை பொறுத்த வரையில் இன்றும் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இன்று கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5,138 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 41,104 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக சற்று ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியினை பொறுத்த வரையில், இன்றோடு கடந்த இரண்டு தினங்களாகவே சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று பெரியளவில் மாற்றம் இன்றி கிராமுக்கு 62.60 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 626 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து 62,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கம் விலை இனி எப்படி இருக்கும்?

தங்கம் விலை இனி எப்படி இருக்கும்?

தங்கத்தினை பொறுத்தவரையில் சர்வதேச நிபுணர்களும் சரி, இந்திய நிபுணர்களும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே கூறி வருகின்றனர். இதற்கிடையில் வரவிருக்கும் பண்டிகை கால பருவத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

அது ஆபரணமாகவும் சரி, அல்லது முதலீட்டு நோக்கிலும் சரி. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேங்க் ஆஃப் அமெரிக்கா தங்கம் விலையானது 3000 டாலர்களை தொடலாம் என்றும் கூறியிருந்தது. ஏனெனில் தங்கம் விலையானது வட்டி விகிதங்கள் குறைவு, பொருளாதார தூண்டுதல் மற்றும் பொருளாதாரம் குறித்த நிச்சமயற்ற தன்மை மற்றும் வரவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் ஆகியவை தங்கம் விலையினை அதிகரிக்கும் தூண்டுகோல்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

கோர்கரன் தங்கமானது டாலரில் அவுன்ஸூக்கு 5000 டாலர் வரை கூட செல்லக்கூடும் என்றும் கணித்திருந்தது. தங்கம் விலை இன்று அதிகரிக்காவிட்டாலும், சுரங்க நிறுவனங்கள் இன்னும் தலைகீழாக உள்ளன. ஏனெனில் அவை 2011ல் இருந்ததை விட 50 - 60% குறைவாக வர்த்தகம் செய்கின்றன. இதற்கிடையில் மற்ற ஆய்வாளர்கள் தங்கத்தின் விலையானது நடுத்தர காலத்தில் அவுன்ஸூக்கு 3000 டாலர் மற்றும் 5000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் கணித்துள்ளனர்.

தங்கம் விலை $5000 டாலர்களை தொடலாம்

தங்கம் விலை $5000 டாலர்களை தொடலாம்

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3000 டாலர்களை எட்டும் என்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் எதிர்பார்க்கின்றது. இதே சிட்டி குரூப் மற்றும் நியூயார்க்கினை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான எலக்ட்ரம் குழுமத்தின் நிறுவனர் தாமஸ் கபிலன் தங்கம் விலையானது 5,000 டாலரினை தொடலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+