செம சரிவில் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் தான்.. இனியும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.

 

இதற்கிடையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க முடியுமே என்ற எண்ணம் எழுந்துள்ளது. எனினும் தங்கம் விலையானது இப்படியே குறையுமா? அல்லது இங்கிருந்து ஏற்றம் காணுமா? தற்போது வாங்கி வைக்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

வரவிருக்கும் வாரங்களில் இந்தியாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அதனைத் தொடர்ந்து பொங்கல் விழா என ஏராளமான பண்டிகைகள் வரவிருக்கின்றன. இதனால் விழாக்காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையிலேயே தங்கம் விலை குறைந்தாலும், அது ஆபரணத் தங்கத்தில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படியுள்ளது? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எப்படி உள்ளது? இனியும் விலை குறையுமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்.

Comex சந்தையில் தங்கம் விலை
 

Comex சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 4.50 டாலர்கள் குறைந்து 1839.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1841.65 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று 1841.55 டாலர்களாக தொடங்கியுள்ளது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 24.073 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 24.067 டாலர்களாக தொடங்கியுள்ளது. ஆக இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சற்று குறைந்து 24.032 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, பலத்த சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 272 ரூபாய் குறைந்து, 49,052 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 49,324 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,101 ரூபாயாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 403 ரூபாய் குறைந்து, 63,332 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் 63,735 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 63,482 ரூபாயாக தொடங்கியுள்ளது.

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வார கேண்டில் பேட்டனில் மார்னிங் ஸ்டார் பேட்டர் பார்ம் ஆகியுள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று சரியும் விதமாக காணப்படுகிறது. நேற்று கூறியது போல, நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், இன்ட்ராடே வர்த்தகத்தில் தங்கம் விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக வாங்குபவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் சாதகமாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்க டாலரின் மதிப்பும் சற்று வலுவிலந்து காணப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக சரிவினை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனாக இருப்பதால், தங்கம் விலையானது அதிகளவிலான சரிவினை இது தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், சரிவடைந்து வரும் பொருளாதாரத்தினை விரைவில் மீட்டெடுக்க, இன்னும் ஊக்கத் தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இப்படி பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாக உள்ளன.

தடுப்பூசிக்கு பலர் ஒப்புதல்

தடுப்பூசிக்கு பலர் ஒப்புதல்

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், முதலில் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பின்னர் அமெரிக்காவும் பிப்சரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பிறகு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவிலும் அடுத்த மாதம் முதல் தடுப்பூசி செயல்பாட்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இவை தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளன.

தங்கம் விலை பலத்த சரிவினைக் காணலாம்

தங்கம் விலை பலத்த சரிவினைக் காணலாம்

தங்கம் விலையானது தற்போது சற்று சரிவினைக் கண்டு வந்தாலும், நிபுணர்கள் கூறுவதை போல தடுப்பு மருந்துகள் எப்போதிலிருந்து அமலுக்கு வருகின்றதே, அப்போதிலிருந்து தங்கம் விலை இன்னும் சரியத் தொடங்கலாம் என்று கூறியுள்ளனர். உண்மையில் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகளுக்கே தங்கம் விலை சரிகிறது எனில், அது அமலுக்கு வரும் போது, பலத்த வீழ்ச்சியினை காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

பல எதிர்பார்ப்புகள்

பல எதிர்பார்ப்புகள்

இது தவிர பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பலத்த எதிர்பார்ப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆக இப்படி சில விஷயங்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அதோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், இன்னும் பாதுகாப்பு புகலிடத்திற்கு ஊக்கமாக அமையலாம். அதோடு இந்த வாரத்தில் அமெரிக்காவில் நடக்க விருக்கும் ஃபெடரல் வங்கிக் கூட்டத்தில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்றும், பிரெக்ஸிட் ஒப்பந்தம், அமெரிக்க சீன பிரச்சனை இப்படி பல பிரச்சனைகள் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இவைகள் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 50,150, முக்கிய சப்போர்ட் லெவல் 47,700 ரூபாயாகும். தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் வைத்திருக்க நினைப்பவர்கள் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall sharply today, silver rates also plunged

Gold price updates.. Gold prices fall sharply today, silver rates also plunged
Story first published: Monday, December 14, 2020, 11:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X