சூப்பர் சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் என்ற வார்த்தையை நம் வாழ்வில் நாம் கேட்காமல் இருந்திருக்க முடியாது. ஏன் ஆசை குழந்தையை கூட தங்கம் என்று அன்பாக கூப்பிடுவோம். அந்தளவுக்கு நம் உணர்வில் கலந்திருக்கும் தங்கம், கடந்த சில அமர்வுகளாகவே பட்டையை கிளப்பிக் கொண்டு ஏற்றம் கண்டு வருகின்றது. .

 

அதிலும் திங்கட்கிழமையன்று முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுக்கும் விதமாக தங்கம் விலை கிடு கிடு ஏற்றத்தில் காணப்பட்டது.

இது ஏற்கனவே தங்கம் வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும். வாங்கதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுதுள்ளது.

அமெரிக்க சந்தை சரிவு.. ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. தொடரும் மந்தநிலை..!

முதலீட்டாளர்கள் குழப்பம்

முதலீட்டாளர்கள் குழப்பம்

நேற்றே பலத்த ஏற்றம் கண்ட தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. இந்த நேரத்தில் தங்கத்தினை வாங்கலாமா? இங்கிருந்து இப்படியே ஏற்றம் காணுமா? அல்லது குறையுமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்கத்திற்கு பல சாதகமான காரணிகள் உள்ளன. அதோடு பங்கு சந்தைகளும் சரிவில் உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன விலை நிலவரம்? இனி விலை குறையுமா? இப்படியே கூடுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில் வாங்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், அடுத்த சப்போர்ட் அன்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
 

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று வாரத் தொடக்கத்திலேயே நிபுணர்களின் கணிப்பினை எல்லாம், முறியடித்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று காலையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்ட தங்கம் விலையானது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், எவ்வளவு குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.10 டாலர்கள் குறைந்து 1879.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று மேலாகத் தான் தொடங்கியிருந்தாலும், இண்டிராடே வர்த்தகத்தில் சற்று குறைந்து, ஏற்றம் காணலாம் என்பது போலவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

திங்கட்கிழமையன்று வெள்ளியின் விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டு ராக்கெட் வேகத்தில் ஏற்றம் கண்டு வந்தது. சர்வதேச சந்தையில் கிட்டதட்ட 4% ஏற்றம் கண்டது. இதற்கிடையில் இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வெள்ளியின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை சற்று குறைந்து 26.372 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது இன்று சரிய ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 73 ரூபாய் குறைந்து, 50,343 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 5,800 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய காமடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது இன்று காலை தொடக்கத்தில் ஏற்றத்தில் தான் தொடங்கியது. எனினும் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 518 ரூபாய் குறைந்து, 68,500 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 77,700 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 9,200 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது.

இது வாங்க சரியான இடமா?

இது வாங்க சரியான இடமா?

தற்போது பலரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி, தட்டு தடுமாறி வரும் தங்கத்தினை தற்போது வாங்கலாமா? என்பது தான். ஏனெனில் சில காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் தற்போது வாங்கலாமா? ஆனால் நேற்று பலமான ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்து வருவதன் காரணமாக சற்று சரிவினைக் கண்டு வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்

அதிகரிக்கும் கொரோனா பரவல்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் புதிய கொரோனா பரவலானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதிய தடுப்பூசி எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

லாக்டவுன் அச்சம்

லாக்டவுன் அச்சம்

ஆக இந்த நிலையில் மீண்டும் பல சர்வதேச நாடுகள் லாக்டவுனை அமல்படுத்துமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இது புதிய வகை கொரோனாவுக்கு இந்த தடுப்பூசி சரிவருமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இது தங்கம் விலையேற்றத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க, 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மீட்பு நடவடிக்கை தொடர்பாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடையே பேச்சுவார்த்தை ஒரு சூமுக நிலையை எட்டியுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.

யார் யாருக்கு இழப்பீடு?

யார் யாருக்கு இழப்பீடு?

அமெரிக்காவில் இதன் அடுத்த கட்டமாக, நாடாளுமன்றத்தில் ஊக்கத்தொகைக்கான உத்தரவு நிறைவேற்றப்படவுள்ளது. இதன்படி கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு அனைத்து அமெரிக்கர்களுக்கும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் வழங்கப்படவிருப்பதாக தெரிகிறது.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

அதோடு அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், லாக்டவுன் எதிர்பார்ப்பு, கடுமையான நடவடிக்கைகள் என பலவும் பங்கு சந்தைகள் சரிய காரணமாக அமைந்துள்ளது. ஊக்கத் தொகையே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகரித்து வரும் கொரோனாவினால், அதனை அதிகரிக்க இது தூண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள்

போக்குவரத்து கட்டுப்பாடுகள்

லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா பரவல் அச்சத்தால், மீண்டும், சர்வதே விமானங்களுக்கு தடை விதிகப்பட்டுள்ளது. ஆக இப்படி எல்லாமே தங்கத்திற்கு சாதகமான காரணிகளாகவே உள்ளன. எனினும் தங்கம் விலையில் மீண்டும் ஒரு திருத்தம் இருக்கும். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices fall sharply today, silver rates also tumble

Gold price update.. gold prices fall sharply today, silver rates also tumble
Story first published: Tuesday, December 22, 2020, 12:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X