தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக சற்று அழுத்தத்திலேயே காணப்படுகிறது. இது இன்னும் குறையுமா? இது வாங்க சரியான நேரமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி பல கேள்விகள் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதுவும் தங்கம் விலையானது தற்போது மூன்று மாதமாக குறைந்த விலையில் காணப்படுகிறது. இதே போல வெள்ளியும் பெரியளவில் சரியா விட்டாலும், சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.
குறிப்பாக எம்சிஎக்ஸ் சந்தையில் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதமாக 46,000 ரூபாய் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இது தற்போது 46,500 என்ற நிலையில் காணப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 47,600 ரூபாயாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறைந்த தங்கம் விலை
இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 2,700 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 9,700 ரூபாய்க்கும் மேலாக சரிவில் தான் காணப்படுகிறது. இதே போல சர்வதேச சந்தையில் 1760 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது.
மிகப்பெரிய மாத அளவிலான சரிவு
இந்த சரிவானது கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய மாத சரிவாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் விலை மதிப்பற்ற உலோகமான தங்கத்தின் விலையானது 7.5% சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று கூறிய நிலையில், மேற்கொண்டு தங்கம் விலையானது சரிவினை சந்தித்தது.
ஃபெடரல் வங்கி வட்டி விகிதம்
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் குறைந்த தங்கம் விலை, பணவீக்கம் காரணமாக பெரிய அளவிலான சரிவு தடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை எப்படியிருக்கும்?
குறுகிய கால நோக்கில் தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1745 டாலர்களை உடைத்தால் இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மீண்டும் 1795 டாலர்களை உடைத்தால், அது மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்கும்.
சாதகமான டேட்டாக்கள்
எப்படியிருப்பினும் அமெரிக்கா பங்கு சந்தைகளில் ஏற்படும் அழுத்தம், தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நுகர்வோர் நம்பிக்கை குறித்தான டேட்டாவானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டது.
புதிய வகை கொரோனாவுக்கு ஆண்டிபயோடிக்
மேலும் தற்போது புதிய வகை கொரொனா தொற்றுக்கு மாடர்னா இன்க் நிறுவனம், ஆண்டிபயோடிக் மருந்துகளை உருவாக்கியுள்ளதையடுத்து, இதுவும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது.
காமெக்ஸ் சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 3.85 டாலர்கள் குறைந்து, 1759.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் சந்தையில் வெள்ளி
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.892 டாலர்களாக காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 74 ரூபாய் குறைந்து, 46,484 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும்போது 9700 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே இம்மாதத்தில் மட்டும் 2700 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. மேலும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போலவே தங்கம் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 154 ரூபாய் அதிகரித்து, 67,386 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,410 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 30 ரூபாய் குறைந்து, 4,810 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 38,480 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
இதே ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து, 72.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 72,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். எப்படியிருப்பினும் குறையும் போது வாங்கினால் இன்னும் லாபம் சற்று அதிகமாக கிடைக்கும். இதே போல வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications