தங்கம் விலை வீழ்ச்சியா.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ச்சியாக பலமான ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்துள்ளது.

பொதுவாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, கடந்த சில வாரங்களாகவே, அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும் மொத்தமாக பார்க்கும் போது ஏற்றத்தில் தான் இருந்து வருகிறது.

அதிலும் புத்தாண்டிற்கு பிறகு முதல் வர்த்தக நாளான நேற்று, தங்கம் மற்றும் வெள்ளி விலையானது கிடு கிடு ஏற்றத்தில் காணப்பட்டது. இது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை கொடுக்காதா? இனி குறையுமா? குறையாதா? இப்போது வாங்குவது சரியான விஷயமாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்தன.

சீனா-வை தொடர்ந்து வியட்நாம்.. மாஸ்காட்டும் இந்திய விவசாயிகள்.. 10 வருடத்திற்குப் பின் அரிசி ஏற்றுமதிசீனா-வை தொடர்ந்து வியட்நாம்.. மாஸ்காட்டும் இந்திய விவசாயிகள்.. 10 வருடத்திற்குப் பின் அரிசி ஏற்றுமதி

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

அதெல்லாம் சரி முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை போல கொரோனாவுக்கான தடுப்பு மருந்தும் வந்தாயிற்று. இது விரைவில் செயல்பாட்டுக்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினைத் தானே காண வேண்டும். மாறாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறதே? என்ன காரணம். இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? இது இப்படியே நீடிக்குமா? இனி எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? தற்போது வாங்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடங்கிய ஏற்றமானது, தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. இது அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்தில் தான் உள்ளது. எனினும் முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக இன்று சற்று சரிவில் உள்ளது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.50 டாலர்கள் குறைந்து 1943.10 டாலர்களாக காணப்படுகிறது. நேற்றைய முடிவில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் 1946.60 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1945.30 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாததையடுத்து, வெள்ளியின் விலை சற்றே குறைந்து காணப்படுகிறது. இது தற்போது 0.05% குறைந்து கண்டு, 27.355 டாலர்களாக காணப்படுகிறது. நேற்று வெள்ளியின் விலையானது 27.364 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 27.312 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது. இது இன்று சற்று விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்திய சந்தையிலும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 36 ரூபாய் குறைந்து, 51,388 ரூபாயாக காணப்படுகிறது. நேற்று தங்கம் விலையானது 51,424 ருபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 51,397 ரூபாயாகவே தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை இன்னும் சரிவினைக் காணலாம் போல காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தை தடுமாற்றத்தில் உள்ள நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 124 ரூபாய் அதிகரித்து, 70,160 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் 70,036 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 70,302 ரூபாயாக தொடங்கியுள்ளது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையும் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்யும் நோக்கத்துடன், டிரம்ப் ஜார்ஜியா அமைச்சருடன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிடனுக்கு அதிகரிக்கும் ஆதரவு

பிடனுக்கு அதிகரிக்கும் ஆதரவு

தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத நிலையில், பிடனின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனினும் டிரம்ப் பேசியதாக வெளியான ஆடியோ மூலம், பிடனுக்கு இன்னும் ஆதரவு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இதனால் பதவியேற்புக்கு பிறகும் பிடனுக்கு இது ஊக்கத்தினை அளிக்கும். அதோடு அவரது கொள்கைகளை முன்னெடுப்பதை எளிதாக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடம்

தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடம்

தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் நிலையில், பிரிட்டனில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மூன்றாவது முறையாக முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மற்ற நாடுகளிலும் புதிய வகை கொரோனா பரவல் இருக்குமோ? வந்தால் பொருளதாரம் என்னவாகுமோ என்ற பயமும் எழுந்துள்ளது. ஆக இதெல்லாம் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளன.

தங்கம் விலை – லெவல்கள்

தங்கம் விலை – லெவல்கள்

தங்கம் விலையின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 51,100 - 50,920 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 51,770 - 52,100 ரூபாயாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் - 69,200 -, 68,500 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 70,800 - 71,500 ரூபாயாகும். மேற்கண்ட பல காரணங்களினால் தங்கம் விலையான சற்று சரிந்தாலும் கூட, வாங்குவதற்கான முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது.,

வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு

வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் கடந்த முறையே வட்டி குறைப்பு இன்னும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமையன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. அப்படி குறைக்கப்பட்டால் அது டாலரின் மதிப்பில் எதிரொலிக்கும். இது தங்கம் விலையில் மாற்றத்தினை கொண்டும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today after big surge

Gold price updates.. Gold prices fall today after big surge
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X