வரலாற்று உச்சத்திற்கு பின்பு தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறையவே குறையாதா? இனி சாமானியர்கள் வாங்கவே முடியாதா? இனி என்ன தான் ஆகும். குறையுமா? இல்லையா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தொடர்ந்து புதிய உச்சத்தினை கண்டு வந்த தங்கமானது, வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், நிபுணர் மத்தியில் 3,000 டாலர்கள் வரை கூட செல்லலாம் என்றும் கூறிவருகின்றனர்.

இதுவும் காரணம்

இதுவும் காரணம்

தங்கம் விலையானது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் டாலரின் மதிப்பு சரிவாகும். முக்கிய ஆறு நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. இது கிட்டதட்ட இரண்டு வருட வீழ்ச்சியில் காணப்படுகிறது. இது தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஊக்கத் தொகையில் தாமதம்

ஊக்கத் தொகையில் தாமதம்

இதற்கிடையில் டிரம்ப் நிர்வாகமும் ஜனநாயக கட்சியினரும், கொரோனா வைரஸ் தூண்டுதல் தொகுப்பில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக ஊக்கத் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுவும் டாலரின் மதிப்பில் ஒரு அழுத்தத்தினை ஏற்படுத்தி வருகிறது.

பத்திர லாபம்

பத்திர லாபம்

எல்லாவற்றையும் விட வட்டி குறைவால் அமெரிக்க பெஞ்ச்மார்கில் 10 ஆண்டு கால டிரசரி லாபமானது ஐந்து மாதங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு சரிந்துள்ளது. ஆக வட்டி குறைப்பினால் லாபம் சரிந்துள்ளதால், தங்கத்தினை வாங்கவே முதலீட்டாளார்கள் ஆரவம் தெரிவித்து வருகின்றனர்.

தங்கம் விலையானது அதிகரிக்கும்

தங்கம் விலையானது அதிகரிக்கும்

தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளார்கள் மாதாந்திர வேலைவாய்ப்பு அறிக்கையில் கவனம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வேலை வாய்ப்புகளில் மந்த நிலையை காண்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுக்கிறது.

அடுத்த டார்கெட் இது தான்

அடுத்த டார்கெட் இது தான்

ஏற்கனவே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 35% அதிகமாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், நிலவி வரும் நிலையற்ற பொருளாதார நெருக்கடியினால் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த நிலையில் தான் பாங்க் ஆப் அமெரிக்கா தங்கம் விலையானது 18 மாதங்களில் 3000 டாலரினை எட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது,

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றாலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று காலை (9.45 மணியளவில் ) அவுன்ஸூக்கு 8.90 டாலர்கள் குறைந்து 2049.50 டாலர்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது 1.45 டாலர் மட்டுமே குறைந்து 2056.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை கண்டு வரும் நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. எனினும் இது நிலையான ஏற்றம் அல்ல என் கிறார்கள் நிபுணர்கள். ஆக தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போது வாங்கி வைத்து லாபம் பார்க்கலாம் என்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 0.060 டாலர்கள் அதிகரித்து 28.470 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இன்று காலை தொடக்கமானது 29.852 டாலராக தொடங்கிய நிலையில், தற்போது சற்று குறைந்து 28.450 டாலராக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவு விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளி விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, தங்கம் விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராமுக்கு 114 ரூபாய் குறைந்து, தற்போது 55,731 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்சமான 56,191 ரூபாயினை தொட்ட பிறகு கண்ட முதல் வீழ்ச்சியாகும். இது 1.21% வீழ்ச்சியாகும். இது புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என்று நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

எம்சிஎக்ஸ் எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் எம்சிஎக்ஸ் வெள்ளி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, வெள்ளி விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. தற்போது 13 ரூபாய் அதிகரித்து, 76,092 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் நீண்ட கால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கும் நிலையிலேயே காணப்படுகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் இன்று இன்னும் விலையில் மாற்றம் காணாத நிலையில், நேற்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு 5,351 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,808 ரூபாயாகவிம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது மாற்றம் காணப்படவில்லை. இது நேற்று சவரனுக்கு 400 ரூபாய் ஏற்றம் கண்டது. நேற்று கிராமுக்கு 5,832 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 46,656 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் ஆபரண விலையானது நடப்பு மாதம் தொடக்கம் முதல் கொண்டே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+