தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் மூன்று நாள் ஏற்றத்திற்கு பின்பா.. இன்னும் குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தை பொறந்தா வழி பிறக்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப தை மாதத்தில் அறுவடை ஆரம்பிக்கும். இதனால் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆக தை மாதத்திற்கு முன்னதாக பல மாதங்களாக பட்ட பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் கூறுவார்கள்.

 

இதுமட்டும் அல்ல இன்னும் பல கருத்துகளும் இந்த வரிகளுக்கு உண்டு.

இது ஒரு புறம் எனில், இந்த மாதத்தில் பல மூகூர்த்த தினங்களும் உண்டு. இதனால் திருமண விழாக்களுக்கு தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் விலை எப்படி?

தங்கம் விலை எப்படி?

கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, இன்று காலையில் சற்று வீழ்ச்சி கண்டிருந்தாலும், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 39,910 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் 39,880 ரூபாய் வரை சென்று அதிகபட்சமாக 40,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1561.55 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் 1562.65 டாலராக சென்று, குறைந்தபட்சமாக 1556.65 டாலர் வரை சென்று தற்போது 1561.45 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண தங்கம்
 

ஆபரண தங்கம்

கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கம் (22 கேரட்) விலையானது, இன்று சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையானது 3,820 ரூபாயாகவும், சவரனுக்கு 30,560 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், கடந்த ஐந்து நாட்களில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, கடந்த இரண்டு தினங்களாக மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வருகிறது. ஒரு கிராம் 49 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது 49,500 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவையானது இந்த மாதத்தில் அதிகரிக்கலாம் என்றும், குறிப்பாக தமிழகத்தில் இது அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் நுகர்வு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை பெரியதாக குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும்

தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும்

மேலும் கிராமப்புறங்களில் தை மாதம் அறுவடை காலம் ஆதலால், மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால், அவர்களின் முதலீடு தங்கத்தில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சர்வதேச சந்தையாகட்டும், ப்யூச்சர் வர்த்தகமாகட்டும் விலை குறைந்தாலும், ஆபரண தங்கம் விலை அந்தளவுக்கு குறையுமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today after rising 3 days, please check here

Jewellers expect demand to pick up. Weddings are one of the biggest of gold purchases in India. So gold prices are steady in India.
Story first published: Monday, January 20, 2020, 14:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X