தங்கம் விலை மூன்றாவது நாளாக சரிவு... ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவு.. இனியும் குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.

 

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வத்தின் மத்தியில், தற்போது டிஜிட்டல் தங்கத்தின் மீதும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. இதனால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்திலும் லாபம் பார்த்து வருகின்றனர் இந்திய முதலீட்டாளர்கள்.

இதற்கு சிறந்த ஆப்சனாக எம்சிஎக்ஸ் தங்கம் பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப, இந்திய சந்தையில் தங்கம் விலையானது மாற்றம் காண்கின்றது. ஆக அனுதினமும் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

ஆப்கானிஸ்தானில் இந்திய நிறுவனங்கள், இந்திய ஊழியர்களின் நிலை என்ன..?! ஆப்கானிஸ்தானில் இந்திய நிறுவனங்கள், இந்திய ஊழியர்களின் நிலை என்ன..?!

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிந்துள்ள நிலையில், இந்த சரிவானது இப்படியே தொடருமா? இதனால் இந்திய சந்தையில் தங்கம் விலை என்னவாகும்? இன்று தங்கத்தினை வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் காலை அமர்வு விடுமுறை என்பதால், மாலை அமர்வில் இதன் எதிரொலி இருக்ககும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

என்ன காரணம்

என்ன காரணம்

தங்கம் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவான ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினை கண்டு வருகின்றது. டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு ஏற்றத்திற்கு காரணம்
 

டாலர் மதிப்பு ஏற்றத்திற்கு காரணம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது சந்தையில் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இதற்கு என்ன காரணம். ஏன் இந்த ஏற்றம். எதற்காக தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் அதிகாரிகள் பத்திர கொள்முதல் குறையலாம் என கூறியுள்ள நிலையில், டாலரின் மதிப்பானது வலுவடைந்துள்ளது.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

சர்வதேச பங்கு சந்தைகள் பலமான சரிவில் காணப்படுகின்றன. எனினும் இந்த ஆண்டின் பிற்பாதியில் பத்திர கொள்முதல் மெதுவாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், அது டாலரின் மதிப்பினை ஊக்குவித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பானது ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. இதனால் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

ஒரு புறம் டாலரின் மதிப்பானது உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுத்துள்ள உருமாற்றம் அடைந்துள்ள கொரோனாவின் தாக்கமானது, பொருளாதாரத்தினை இன்னும் எந்தளவுக்கு சீர்குலைக்க போகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

மற்ற நாணயதாரர்களுக்கு விலை அதிகம்

மற்ற நாணயதாரர்களுக்கு விலை அதிகம்

டாலரின் மதிப்பானது உச்சம் தொட்டுள்ள நிலையில், இது மற்ற நாணயதார்களுக்கு தங்கத்தின் விலையினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதுவும் தங்கத்தில் முதலீட்டினை குறைக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதுவும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையினை பொறுத்தவரையில் மூன்றாவது நாளாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.50 டாலர்கள் குறைந்து, 1781.55 டாலர்களாக காணப்படுகிறது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட இன்று மேலாகத் தொடங்கியிருந்தாலும், நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.72% குறைந்து, 23.253 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளி விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியிருந்தாலும், நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

Array

Array

எம்சிஎக்ஸ் சந்தையானது இன்று காலை அமர்வில் விடுமுறை என்பதால், மாலை அமர்வில் விலை நிலவரம் என்ன என்பது தெரியவரும். எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்தவரையில் இன்று மாலை அமர்வில் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். வெள்ளி விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 15 ரூபாய் குறைந்து, 4,449 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 35,592 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் குறைந்து, 4,854 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 38,832 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0.80 பைசா குறைந்து, 67.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 67,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் மீடியம் டெர்மில் சற்று குறைவது போலவே டெக்னிக்கல் பேட்டர்ன்கள் உள்ளன. இது தங்கத்திற்கு சாதகமாகவே பல காரணிகளும் உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today again, could fall further? Gold jewellery price also fall today in India

Gold prices fell to $1793.95 in Comex market, silver also falling 0.56% to $23.293 per ounce
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X