இன்று சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார நிலை மிக மோசமடைந்து வருகிறது.
இதற்கிடையிலும் இந்த ரணகளத்திலும் தங்கம் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டு வருகிறது.
அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது (4 மணியளவில்) அவுன்ஸூக்கு 19.20 டாலர்கள் குறைந்து 1,733.25 டாலராக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 1.06 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த இரண்டு நாள் ஏற்றத்துக்கு பின்பு மூன்றாவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இன்று தங்கம் விலையானது 10 கிராம் தங்கத்தின் விலையானது 461 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 46,670 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 1 சதவீத வீழ்ச்சியாகும். இது மூன்று நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று சரிவாகும்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது, கிட்டதட்ட 2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 7 நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று வெள்ளி விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று (4 மணியளவில் ) வெள்ளியின் விலையானது 0.351 டாலர் குறைந்து 17.683 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது இன்று 924 ரூபாய் அதிகரித்து 48,660 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 2 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின்பு இன்று வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் ஆபரணம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலையானது கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 4,524 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 36,192 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 544 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.
தூய தங்கத்தின் விலை
ஆபரண தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்தாலும், தூய தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இன்று கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 4,905 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 650 ரூபாய் அதிகரித்து 49,050 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில் இன்று ஆபரண வெள்ளி விலையானது கிராமுக்கு 0.80 பைசா குறைந்து 48.20 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 800 ரூபாய் குறைந்து 48,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று கிலோவுக்கு 1340 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், இன்று 800 ரூபாய் குறைந்துள்ளது.
பாதுக்காப்பு புகலிடம்
உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் மிக வேகமாக பொருளாதாரத்தினை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிலும் அமெரிக்காவில் மிக துரிதமான நடவடிக்கைகளை காண முடிகிறது. ஆக இது பாதுகாப்பு புகலிடமாக கருத்தப்படும் தங்கம் விலை இது மட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைக்கப்படலாம்
மேலும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இந்த ஆண்டு தங்கம் விலை சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications