சற்றே சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், ஐந்து மாத உச்சத்தினை தொட்டது.

இது சர்வதேச சந்தையில் இந்த வாரத்தில் ஐந்து மாத உச்சமான 1907.67 டாலர்களை தொட்டது. இது அமெரிக்க பத்திர சந்தையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், டாலரின் மதிப்பும் அழுத்தத்தில் காணப்பட்டது. இதையடுத்து தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தது. இதற்கிடையில் தற்போது புராப்பிட் புக்கிங் காரணமாக சற்று குறைந்துள்ளது.

மீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..! மீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..!

அதெல்லாம் சரி தற்போது தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? பார்க்கலாம் வாருங்கள்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 3.50 டாலர்கள் குறைந்து, 1,906.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலை மேலாகத் தான் தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

வெள்ளியின் விலையானது தற்போது வரையில் 0.15% ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.043 டாலர்கள் அதிகரித்து, 28.247 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாக உள்ளது. எனினும் நேற்றைய குறைந்த விலையினை உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ்-சில் தங்கம்
 

எம்சிஎக்ஸ்-சில் தங்கம்

எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் காண்டிராக்டில் தற்போது 10 கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 49,552 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் நீண்ட கால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ்-சில் வெள்ளி

எம்சிஎக்ஸ்-சில் வெள்ளி

வெள்ளியின் விலையும் சற்று குறைந்து, இது தற்போது கிலோவுக்கு 18 ரூபாய் குறைந்து, 72,660 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. வெள்ளி விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 4,655 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 37,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரண தங்கம் விலையானது நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையானது தற்போது கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5,079 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,632 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,790 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே ஆபரண வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 0.90 பைசா அதிகரித்து, 77.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது, நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது.

பத்திர லாபம் சரிவு

பத்திர லாபம் சரிவு

அமெரிக்காவின் பத்திர சந்தையானது 1.60% சரிந்துள்ள நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. பத்திர சந்தையில் சரிவினைக் கண்டுள்ள, டாலரின் மதிப்பு அழுத்தத்தில் காணப்படுகிறது. இது தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

இதற்கிடையில் பொருளாதாரம் மீட்சி காணலாம். இதனால் பணவீக்கமானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அமெரிக்காவின் முக்கிய டேட்டாவான மே மாதத்தில் வேலையின்மை விகிதத்தினை பற்றி கண்கானித்து இன்று வரவிருக்கும் நிலையில் அதனையும் கவனிப்பார்கள். ஆக இது தங்கம் விலையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையில் எதிர்பார்ப்பு

தங்கம் விலையில் எதிர்பார்ப்பு

தற்போதைக்கு புராபிட் புக்கிங் காரணமாக தங்கம் விலையானது சரிவினினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்வி பின்மார்ட் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வாளர் மனோஜ் குமார் ஜெயின் அறிக்கையின் படி, தங்கத்தின் சப்போர்ட் லெவல்கள் 1894 - 1884 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1914 - 1933 டாலர்களாகவும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 27.88 - 27.55 டாலர்களாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 28.40 - 28.70 டாலர்களாகவும் காணப்படுகிறது.

இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல்கள் 49,180 - 48,980 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,660 - 49,850 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 71,700 - 71,200 ரூபாயாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 73,300 - 73,800 ரூபாயாகும்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் எந்த காரணிகளும் மாறவில்லை. தற்போதைக்கு குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே செய்யும். பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today from five month highs

Gold price updates.. Gold prices fall today from five month highs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X