சரிவில் தங்கம் விலை.. இது சாமனியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது (Gold price) வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது இந்திய சந்தை, சர்வதேச சந்தைகள் என இரண்டிலும் சரிவில் காணப்படுகிறது.

இது பெரியளவில் சரிய வாய்ப்பில்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கும், மீடியம் டெர்ம் வர்த்தகர்களுக்கும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கும் குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வரும் சந்தையானது, இன்றும் சற்று சரிவில் இருப்பதும் கூட அப்படியே இருக்குமோ? இல்லையெனில் இப்போது சரிந்தாலும், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் காணுமோ என்ற எண்ணமே நிலவி வருகின்றது.

இது தங்கம் நல்ல வாய்ப்பு

இது தங்கம் நல்ல வாய்ப்பு

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த தங்கத்தின் விலைக்கு மத்தியில், இன்று சற்று குறைந்துள்ளது, குறைந்த விலையில் வாங்க இது நல்ல வாய்ப்பாக அமையும். ஏனெனில் தினசரி கேண்டிலில் சற்று குறையும் விதமாக காணப்பட்டாலும், வார கேண்டில் பேட்டர்னில் ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலையானது 11,100 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நடுத்தர மக்களுக்கும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கும் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை நிபுணர்கள் கூறியது போல ஏற்றத்தில் தான் இருக்குமா? இன்று எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

சற்றே தடுமாறும் காமெக்ஸ் தங்கம் விலை

சற்றே தடுமாறும் காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து, 1741.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலை சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

சூப்பர் சரிவில் வெள்ளி விலை

சூப்பர் சரிவில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது பெரியளவில் குறையாவிட்டாலும், வெள்ளியின் விலை பலத்த சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது, கிட்டதட்ட 2% சரிந்து, 25.832 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இன்று இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் சற்றே சரிவில் தங்கம் விலை

இந்திய சந்தையில் சற்றே சரிவில் தங்கம் விலை


இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 30 ரூபாய் குறைந்து, 44,991 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இந்திய சந்தையில் தங்கம் விலையும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுவதால், ஆக குறைந்த விலையில் வரும்போது தங்கத்தினை சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

பலத்த சரிவில் வெள்ளி வெள்ளி விலை

பலத்த சரிவில் வெள்ளி வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, பலத்த சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 1049 ரூபாய் குறைந்து, 66,500 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

அமெரிக்காவின் பத்திர லாபம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. அதோடு வட்டி விகிதமும் இன்னும் சில ஆண்டுகளுக்கு குறைவாகவே இருக்கும் என்பதால், இது மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும். அதோடு வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடு செய்வதனையும் தவிர்க்கின்றனர். இதனால் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது 8% சரிவினைக் கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேறு நல்ல லாபம் கொடுக்கும் முதலீடுகளுக்கு மாற்றி வருகின்றனர். இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக பொருளாதாரமும் வேகமாக மீண்டு வந்து கொண்டுள்ளது. இது பங்கு சந்தைகள் ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்கள் இந்த வாரத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மற்றும் கருவூல தலைவர் ஜெனட் எலன், அமெரிக்க பைனான்ஷியல் சர்வீசஸ் கமிட்டி மூலம் முதல் முறையாக சந்திப்பு நடக்கவுள்ளது. ஆக இந்த சந்திப்பில் ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கவனித்து வருகின்றனர். ஆக இதுவும் தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

முதலீட்டாளர்களின் ஆர்வம்

முதலீட்டாளர்களின் ஆர்வம்

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கண்ட வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 11,100 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு பணவீக்கம் பற்றிய கவலையும் இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்கள் இங்கு வாங்க ஆர்வம் காட்டலாம். இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது உச்சத்தில் இருந்து 5000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக குறைந்த விலையானது தங்கத்தினை வாங்க சப்போர்ட்டாக இருக்கலாம்.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

தொடர்ச்சியான ஏற்ற இறக்கத்தின் மத்தியில், தங்கத்தின் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 45,280 - 45,600 ரூபாயாகவும், சப்போர்ட் லெவல்கள் 44,770 - 44,550 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் தங்கத்தின் விலையானது டெக்னிக்கலாக பார்க்கும்போது 44,800 - 45,320 ரூபாய்க்குள்ளும், இதே வெள்ளியின் விலையானது 66,800 - 67,930 ரூபாய் லெவலிலும் காணப்படலாம் என கணித்துள்ளனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தற்போது சற்று குறையும் விதமாகவே காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். அதோடு பணவீக்கமும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். அதோடு உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, 11,100 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall today, silver also drop amid global cues

Gold price update.. Gold prices fall today, silver also drop amid global cues
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X