இரண்டு வார சரிவுக்கு பின்னர் தங்கம் விலையானது இன்று, சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்தின வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள் சரிவின் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. எனினும் அதன் பிறகு குறையத் தொடங்கிய தங்கம் விலையானது, கடந்த இரண்டு வாரங்களாவே தொடர்ச்சியாக குறைந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று சற்று தடுமாற்றத்தில் உள்ளது.
ஆக இன்றும் வழக்கம்போல் குறைந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல சர்பிரைஸ் கொடுக்குமா? அல்லது இது தான் நல்ல வாய்ப்பு என முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கி விடுவார்களா?

தங்கம் விலை எப்படி இருக்கும்?
சரி இனி எப்படி தான் இருக்கும்? இன்று தங்கம் விலை எப்படி இருக்கும். தங்கம் விலையானது தற்போது நல்ல சரிவில் உள்ளதே வாங்கலாமா? வேண்டாமா? இன்னும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? சர்வதேச சந்தையில் தங்கம்
விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்த வாரத்திற்கான சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

மாடெர்னா தடுப்பூசி 100% பலன் தருவதாக ஆய்வில் தகவல்
அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க மாடெர்னா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆக மாடெர்னா நிறுவனம் கோரிக்கைக்கு அனுமதி கிடைத்தால் விரைவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வருகிறது. ஆக இது தங்கம் விலை குறைய வழிவகுக்கலாம்.

அமெரிக்க சீன பதற்றம் அதிகரிக்கலாம்
எனினும் சீனாவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆலோசகரும், தற்போது சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியருமான டேவிட் லி டாவோகுய், தென் சீனா மார்னிங் போஸ்டுக்கு அளித்த பேட்டியில், டொனால்டு டிரம்பை போலவே, ஜோ பிடனும் சீனாவிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார் என சீன அரசை எச்சரித்துள்ளார். மேலும் சீனாவின் தொழில்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார்.

நீடிக்குமா அரசியல் பதற்றம்
அது மட்டும் அல்ல, ஜோ பிடனின் நிர்வாகத்துடனான உறவை மேம்படுத்தும் எண்ணத்தில் இருந்து சீனா விடுபட வேண்டும் என்று டேவிட் லி டாவோகுய் கூறியுள்ளார். வாஷிங்டனுடன் கடுமையாக நடந்து கொள்ள தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தார். ஆக ஒரு புறம் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், பிடன் நிர்வாகம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறதோ என்ற பயமும் இருந்து வருகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று
கொரோனா வைரஸூக்கான தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தாலும், அது விரைவில் செயல்பாட்டுக்கு வருமா? அப்படியே வந்தாலும் அனைவருக்கும் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் பாதுகாப்பு கருத்தி லாக்டவுன் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள்
புதிய கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் 1.1 மில்லியன் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தினை எட்டியுள்ளன. இதன் காரணமாக கலிபோர்னியாவில் வீட்டிலேயே தங்குவதற்கான ஆர்டர்கள் போடப்பட்டுள்ளன. ஆக இது எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ? மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

குறைந்த விலையில் வாங்கலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக தங்கம் விலையானது கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் தற்போது குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் ஆர்வம் காட்டலாம். ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

comex சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையினை சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கடந்த இரண்டு வாரங்களாகவே பலத்த சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 8.05 டாலர்கள் அதிகரித்து, 1788.50 டாலர்களாக காணப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. அதோடு இது குறைந்த விலையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

comex சந்தையில் வெள்ளி நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 1.48% அதிகரித்து, 22.930 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையில் தினசரி கேண்டில் பேட்டர்னில், டோஜி பார்ம் ஆகியுள்ளதால், விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் இந்த வாரம் எக்ஸ்பெய்ரி என்பதால், வர்த்தகர்கள் தங்களது ஆர்டர்களை ரோல் ஓவர் செய்வதும், குறைந்த விலையில் அடுத்த பிப்ரவரி காண்டிராக்டில் வாங்குவதுமாக இருப்பதால், இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. தற்போது 10 கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து, 47,835 ரூபாயாக காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

MCX வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. வெள்ளியின் டிசம்பர் கான்ட்டிராக்டும் இந்த வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், மார்ச் கான்ட்டிராக்டில் வாங்கலாம். இந்த நிலையில் தற்போது கிலோ வெள்ளியின் விலையானது, 457 ரூபாய் அதிகரித்து, 60,679 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?
தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் சில காரணிகள் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. அதோடு டெக்னிக்கலாகவும் சற்று அதிகரிக்கலாம் என்பது போலத் தான் கேண்டில் பேட்டர்களுடன் பார்ம் ஆகி வருகின்றன. எனினும் நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் தற்போது வாங்கலாம். குறுகிய கால நோக்கில் வாங்குபவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.