தடுமாறும் தங்கம் விலை.. குழப்பத்தில் மக்கள்.. வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. ஏனெனில் சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. சொல்லப்போனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 19% சரிவினைக் கண்டுள்ளது. இது குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

எனினும் வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது மேலும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் இது சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலை எவ்வளவு? சர்வதேச சந்தைகளில் வெள்ளியின் விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதக, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? குறிப்பாக இன்று எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கலாம்.

கவனமுடன் வர்த்தகம் செய்யுங்கள்

கவனமுடன் வர்த்தகம் செய்யுங்கள்

தங்கம் விலையானது சற்று ஏற்றத்தினைக் கண்டாலும், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் அது பெரியளவிலான ஏற்றம் இல்லை. அதோடு அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இது எந்தளவுக்கு இருக்கும் என்பதும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டும் என என்பதால், இந்த ஏற்றம் இருக்கலாம் என்றாலும், இது நிலையான ஏற்றமாக தெரியவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை
 

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 7.15 டாலர்கள் அதிகரித்து, 1685.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு இன்று தொடக்கத்தில் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்று இதனை போலத் தான் தொடங்கியது. ஆனால் சரிவிலேயே முடிவடைந்தது. ஏனெனில் வார கேண்டில் பேட்டர்ன் ஆனது சரிவில் காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும், கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 0.60% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.126 டாலர்கள் அதிகரித்து, 25.392 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 91 ரூபாய் அதிகரித்து 44,309 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இந்திய சந்தையில் தங்கத்தின் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு பெரியளவில் மாற்றமின்றி 219 ரூபாய் அதிகரித்து, 66,071 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் அப் ஆகி சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலை சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

உச்சத்தில் இருந்து ரூ.12000 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.12000 சரிவு

இந்திய சந்தையில் தங்கம் விலையானது, தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகவே சரிவினைக் கண்டு வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் இருந்து 19% சரிவில் காணப்படுகிறது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சுமார் 12000 ரூபாய் சரிவிலும் காணப்படுகிறது. இது 11 மாத குறைந்த தங்கம் விலையாகும். இது பலரையும் நீண்டகால நோக்கில் வாங்க தூண்டலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் 10 வருட பத்திர லாபம், 12 மாத உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு 3 மாத உச்சத்தில் உள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளும் உள்ளன. அதோடு பொருளாதாரமும் எதிர்பார்ப்பினை விட வேகமாக மீண்டு வருகிறது. ஆக இதெல்லாம் டாலரின் மதிப்பு மேலும் வலுவடைய காரணமாக அமைந்துள்ளது.

வட்டியில்லா முதலீட்டில் குறையும் ஆர்வம்

வட்டியில்லா முதலீட்டில் குறையும் ஆர்வம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர லாபம் காரணமாக, வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய ஆரம்பித்துள்ளது. அதோடு நிபுணர்கள் கூறியதை போல தங்கம் விலையானது இன்று வரையிலும், 1760 டாலர்களுக்கு கீழேயே வர்த்தகமாகி வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், சரியும் விதமாக காணப்படுகிறது. இது டாலரில் அவுன்ஸூக்கு 1760 டாலருக்கு கீழ் காணப்படும் நிலையில், சற்று சரியவே வாய்ப்புகள் அதிகம். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், தடுப்பூசிகள் பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆக இது கொரோனாவை குறைக்க வழிவகுக்கும். இதனால் பொருளாதாரம் விரைவில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

பல சர்வதேச காரணிகள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் 1650 டாலர்களை தொடலாம். இதே இந்திய சந்தையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல்கள் 44,000 - 43,780 ரூபாயாகும். இதே சந்தையானது ஏற்றத்திற்கு திரும்பினால் 44,440 - 44,660 ரூபாய் என்பது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் 65,400 - 65,100 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 66,500 - 66,900 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், சர்வதேச காரணிகள் பலவும் தங்கத்திற்கு எதிராக காணப்படுகிறது. அப்படியே மீடியம் டெர்மில் தங்கத்தினை பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices falls 19% from its record high? is it the right time to invest?

Gold price update.. Gold prices recover from last week low, is it right time to buy gold?
Story first published: Tuesday, March 9, 2021, 12:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X