தங்கம் விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், தொடர்ந்து சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.
இதே இந்திய சந்தையிலும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் காரணமாக ஆபரண தங்கம் விலையானது இரண்டு நாட்களுக்கு சரிவில் காணப்படுகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில், 1700 - 1800 டாலர்களுக்கு இடையிலேயே காணப்படுகின்றது. எனினும் கடந்த சில வாரங்களாகவே இந்த முக்கிய லெவலை உடைக்கவில்லை. ஆக இந்த லெவல்களில் ஏதேனும் ஒரு முக்கிய லெவலை உடைக்கும் பட்சத்தில், தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றே சரிவில் தங்கம்
தங்கம் விலையானது கடந்த அமர்வினை காட்டிலும் இன்று 1% சரிவில் தான் காணப்படுகிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து பணவீக்கமும் உச்சத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது வட்டி விகிதம் தொடர்ந்து உச்ச விகிதத்திலேயே இருக்க வழிவகுக்கலாம்.

வட்டி எப்படியிருக்கும்?
கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது உச்சத்தில் காணப்பட்டது. எனினும் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த ஐந்து அமர்வுகளுக்கு பிறகு மீண்டும் சற்றே குறைந்து காணப்படுகிறது. இது ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2024ல் பணவீக்கம் என்பது குறையலாம். இதன் காரணமாக வட்டி குறைப்பு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேவை குறையலாம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடானது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.
இது தவிர சீனாவில் கோவிட் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதியானது 45% சரிவினைக் கண்டுள்ளது.

பாதுகாப்பு புகலிடம்
பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது ஆபத்தான காலகட்டங்களில் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது தொடர்ந்து கொண்டுள்ளது. ஆக இது தங்கம் விலைக்கு ஆதரவாக நீண்டகால நோக்கில் அமையலாம். இதனால் தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 14.30 டாலர்கள் அதிகரித்து, 1754.30 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 1.86% அதிகரித்து, 21.305 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் உச்சத்தினை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் 21.640 டாலர்களை உடைத்தால் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. அதுவரையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் இருக்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 337 ரூபாய் அதிகரித்து, 52,470 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை
இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 509 ரூபாய் அதிகரித்து, 61,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் மீடியம் டெர்மில் குறைந்து பின்னரே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 31 ரூபாய் குறைந்து, 4916 ரூபாயாகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 39,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து, 5363 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 272 ரூபாய் குறைந்து, 53,630 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு, 68.10 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 68,100 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.