தங்கம் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு.. வரும் வாரத்தில் விலை எப்படியிருக்கும்.. !

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் கடைசி மூன்று அமர்வுகளாகவே சரிவினைக் கண்ட நிலையில், இந்த வாரத்திலும் சரிவு தொடருமா? அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குறையுமா? தங்க ஆர்வலர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலையின் போக்கு எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 3 மாத உச்சத்தினை எட்டியது. எனினும் முடிவில் 1.30% இழப்பில் காணப்பட்டது.

அழுத்தம் காணலாம்

அழுத்தம் காணலாம்

தங்கம் விலையானது உள்நாட்டு சந்தையில் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக உச்சத்தினை எட்டிய நிலையில், இந்த வாரம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது. எனினும் புராபிட் புக்கிங் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் இருக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் மீடியம் டெர்மில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

ரூபாயின் தாக்கம்

ரூபாயின் தாக்கம்

எனினும் டாலரின் மதிப்பானது சற்றே வலுவிழந்து காணப்படும் நிலையில், இது குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமாடிட்டி நிபுணர்கள், ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில் தங்கம் விலையானது வலுவாக காணப்பட்டது. இந்த போக்கு வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

கடந்த வாரத்தில் டாலரின் மதிப்பு கிட்டத்தட்ட 4% சரிவில் காணப்பட்டது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக காணப்படுகின்றது. எனினும் வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் என்பது சந்தையில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக புராபிட் காரணமாக தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக அமையலாம்.

ஏன் சரிவு

ஏன் சரிவு

சமீபத்திய உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது சரிந்த நிலையில், ஏன் சரிந்தது? இனியும் சரியுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பானது வரும் வாரத்தில் தங்கம் விலையில் முக்கிய காரணியாக அமையலாம்.
இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் சற்றே மெதுவாகத் தொடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகித நடவடிக்கையும் கடினமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

அமெரிக்காவில் செப்டம்பரில் 8.4% ஆக இருந்த அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது, அக்டோபர் மாதத்தில் 8% ஆக குறைந்துள்ளது. இது பணவீக்கம் குறைந்து வருவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு வட்டி விகித நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகிக்கலாம். இது வரவிருக்கும் மாதங்களில் மிதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பணவீக்கம்

இங்கிலாந்து பணவீக்கம்

அமெரிக்காவில் பணவீக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், இங்கிலாந்து பணவீக்கம் தற்போதும் 11.1% ஆக இருந்தது. இது முன்னதாக 10.1% ஆக இருந்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து ரெசசனுக்குள் நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இதற்கிடையில் தங்கத்தில் புராபிட் புக்கிங் இருக்கலாம்.மேலும் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் தொடரலாம். இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு பெரியளவில் மாற்றமின்றி, 4925 ரூபாயாகவும், சவரனுக்கு 39,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5373 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 53,730 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 67 .50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+