தங்கம் விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று குறைந்து வர்த்தகமாகி வருகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகின்றது. ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவிலேயே காணப்படுகின்றது.
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
இதற்கிடையில் வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் என்பது அதிகரிக்குமா? அல்லது மாற்றம் செய்யப்படாமல் இருக்குமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? விலை நிலவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முக்கிய லெவல்
தங்கம் விலையானது தற்போது 1747 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாகவும் மேற்கொண்டு சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் பெடரல் ரிசர்வ் வங்கி குறித்தான கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவினையும் முதலீட்டாளார்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கத்தின் முக்கிய லெவான 1751 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது.

தங்கத்தினை ஊக்குவிக்கலாம்
கடந்த வாரங்களில் சரிவில் காணப்பட்ட டாலரின் மதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தங்கம் விலையானது அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. இது கொரோனா பரவல் காரணமாக சீனாவின் பல முக்கிய பகுதிகளிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆசிய சந்தைகளிம் பங்கு சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. இது முதலீட்டு ரீதியாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை ஊக்குவிக்கலாம்.

வட்டி அதிகரிப்பு
தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதமானது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். வரவிருக்கும் கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை குறைக்க வழிவகுக்கலாம். இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளுபடி அதிகரிக்கலாம்
பிசிகல் தங்கத்தின் மீதான தள்ளுபடி விகிதமானது கடந்த வாரத்தில் இருந்தே உச்சத்தில் இருந்து வருகின்றது. இது தேவையானது சரிவினைக் கண்டுள்ள நிலையில் வந்துள்ளது. சீனாவிலும் கூட பிரீமிய விலையானது குறைந்துள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் & வெள்ளி விலை
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.70 டாலர்கள் குறைந்து, 1747.70 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இதே வெள்ளியின் விலையானது 1.02% குறைந்து, 20.782 டாலராக காணப்படுகின்றது.இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 88 ரூபாய் குறைந்து, 52,490 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 420 ரூபாய் குறைந்து, 60458 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4920 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 39,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 5367 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 53,670 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை
சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 66.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 66,500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.