6வது நாளாக சரியும் தங்கம் விலை.. உச்ச விலையில் இருந்து 9000 ரூபாய் குறைவு..!

இந்தியச் சந்தையில் தங்கம் விலை 6வது நாளாகத் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் சாமானிய மக்களுக்குத் தங்கம் வாங்கும் ஆசை அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை.

இந்தியாவில் கொரோனா தொற்று தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாகப் பங்குச்சந்தை அதிகளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது. பங்குச்சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் சுற்றி நடக்கும் விஷயங்கள் மீது கவலை இல்லையா..? இல்லை நான் மட்டும் தான் கவலைப்படுகிறேனா என்று ஜீரோதா நிறுவனத்தின் தலைவர் நித்தின் காமத் டிவீட் செய்திருந்தார்.

இதற்கு ஏற்றார் போது தங்க முதலீட்டுச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிக லாபத்திற்காகப் பங்குச்சந்தைக்குத் திரும்பியுள்ளது. இதன் வாயிலாகவே தங்கம் விலை இந்தியச் சந்தையில் குறைந்து வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

உலக நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் முதலீட்டாளர்களுக்குச் சந்தை மீது அதிகப்படியான நம்பிக்கை உருவாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட பின் கொரோனா தொற்று குறைந்து, வர்த்தகச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது.

அதிகம் லாபம்

அதிகம் லாபம்

இதன் வாயிலாக முதலீடுகள் அனைத்தும் அதிகம் லாபம் தரும் பங்குச்சந்தையில் குவிந்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் பாதுகாப்புக்காகத் தங்கத்தின் மீது செய்யப்பட்ட முதலீடும் பங்குச்சந்தையிலும், பத்திர சந்தையிலும் குவிந்து வருகிறது.

தங்கத்திற்கான டிமாண்டு

தங்கத்திற்கான டிமாண்டு

இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான டிமாண்டு பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பயத்துடன் வங்கியில் இருக்கும் பணத்தைக் கூடக் கையில் வைத்துக்கொண்டு வரும் சூழ்நிலையில் உருவாகியுள்ளது.

தொடர்ந்து விலை சரிவு

தொடர்ந்து விலை சரிவு

முதலீட்டு சந்தையிலும் தங்கத்திற்கு டிமாண்ட் குறைந்துள்ள நிலையில், இந்தியாவிலும் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்துள்ள நிலையிலும் இதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் வெளிப்பாடு தான் 6 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

இதற்கிடையில் இன்று எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 0.23 சதவீதம் சரிந்து 46,985 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் வெள்ளி பல உற்பத்தி பொருட்களில் பயன்படுத்தும் காரணத்தால் இதற்கான டிமாண்ட் தொடர்ந்து இருக்கிறது. எனவே எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.89 சதவீதம் அதிகரித்து 69,656 ரூபாய் அளவை அடைந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1,789.73 டாலர் வரையில் உயர்ந்து மாலை வர்த்தகம் வரையில் தொடர் சரிவு பாதையில் 1,773 டாலர் வரையில் குறைந்துள்ளது. மேலும் ரூபாய் மதிப்பில் கணக்கிடுகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,33,427 ரூபாயில் இருந்து 1,31,350 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

இன்று அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை வெளியிடப்பட்டு உள்ளது, இதில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பின்பு அந்நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இதனால் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பழைய நிலையிலேயே வைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை.

தங்க முதலீட்டாளர்கள்

தங்க முதலீட்டாளர்கள்

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் தங்க முதலீட்டாளர்கள் சரிவில் தப்பித்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வரும் நிலையில் வட்டி விகிதமும் சுமையாக மாறியிருக்கும்.

சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலை

இன்று சென்னை ரீடைல் சந்தையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து 44,730 ரூபாய்க்கும், 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் சரிந்து 48,390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் சரிந்து 73,300 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை குறைய வாய்ப்பு

தொடர்ந்து தங்கம் விலை குறைய வாய்ப்பு

மேலும் அமெரிக்க அரசு அடுத்தடுத்து பல வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கக் காத்திருக்கும் நிலையில் அமெரிக்கப் பத்திர சந்தையும், முதலீட்டுச் சந்தையும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும். இதனால் சர்வதேச சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குத் தங்கத்திற்கு டிமாண்ட் பெரிய அளவில் இருக்காது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரியவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+