சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. இது சூப்பர் வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சாமனிய மக்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக, இரண்டாவது நாளாக இன்று சரிவில் காணப்படுகிறது.

 

குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையில் அதிக சரிவினை இது தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச காரணிகள் பலவும் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தற்போது எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? குறிப்பாக இன்று எப்படி இருக்கும்? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

comex தங்கம் விலை நிலவரம்

comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4.05 டாலர்கள் குறைந்து, 1734.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

comex வெள்ளி விலை நிலவரம்
 

comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.42% குறைந்து, 25.660 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் தற்போது சற்றூ குறைந்து வருவதால், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் வார கேண்டில் பேட்டர்னில் குறையும் விதமாக காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 105 ரூபாய் குறைந்து, 44,800 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 306 ரூபாய் குறைந்து, 66,025 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 21% கீழாகத் தான் காணப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் குறையுமா? இந்த சரிவு நீடிக்குமா? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? அதனை கணிப்பது கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் நீங்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய திட்டமிடும்போது சற்று யோசிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

தங்கத்தில் எவ்வளவு முதலீடு

தங்கத்தில் எவ்வளவு முதலீடு

ஏனெனில் தங்கம் விலையானது அதன் சப்ளை, தேவை மற்றும் சர்வதேச காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆக அவ்வப்போது பெரியளவில் மாற்றம் காணலாம். ஆனால் இது தொடர்ந்து இருக்காது. ஆக உங்களது நீண்டகால முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்திற்கு 5 -15% ஒதுக்கலாம். ஏனெனில் இது ஈக்விட்டி அல்லது பத்திர சந்தை போல முக்கிய முதலீடு அல்ல, இது ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆப்சன். ஆக அப்படியே தங்கத்தில் முதலீடு செய்தால் அவற்றை 7- 8 ஆண்டுகளுக்கு வைத்திருக்கலாம், அதற்கு முன்பு விற்பனை செய்யக்கூடாது. அதற்கு சிறந்த ஆப்சன் தங்க பத்திரம் அல்லது கோல்டு இடிஎஃப் தான். இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டுமெனில் குறுகிய காலத்தில் வாங்கி விற்று சிறிய அளவில் லாபம் பார்க்கலாம்.

பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா

பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா

தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. எனினும் தங்கம் விலையானது நீண்டகாலமாக 1760 டாலர்களுக்கு கீழேயே வர்த்தகமாகி வருகிறது. நிபுணர்கள் தங்கம் விலையானது 1760 உடைத்து ஏற்றம் கண்டால், 1820 டாலர்களைத் தொடும். ஆனால் அதே சமயம் மீண்டும் சரிவினை கண்டால் 1660 டாலரை உடைத்துக் காட்டினால் மட்டுமே பெரியளவில் குறையும் என கூறுகின்றனர்.

சற்றே குறைந்த பத்திர லாபம்

சற்றே குறைந்த பத்திர லாபம்

அமெரிக்காவில் தொடர்ந்து 10 வருட பத்திர லாபமும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்தது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. அதோடு ஊக்கத்தொகைகள் அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவும், சிறந்த ஜெட்ஜிங் ஆன தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என கணித்துள்ளனர்.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

தற்போது உலகளவில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையிலும், கொரோனா தடுப்பூசிகளும் ஆதாரவாக வந்து கொண்டுள்ளன. இதோடு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆக இது தங்கத்திற்கு எதிராக அமையலாம் என்றாலும், அமெரிக்காவின் வட்டி விகிதம் தொடர்ந்து பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே உள்ளது. ஆக இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. கேண்டில் பேட்டர்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில், வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது 11,500 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுவதால், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாமனிய மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட கால நோக்கிலும் தங்கம் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices falls for second day, silver also drop

Gold price update.. gold prices falls for second day, silver also drop
Story first published: Tuesday, March 23, 2021, 12:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X