தங்கம் விலையில் பெரும் சரிவு.. தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. வல்லுனர்கள் கணிப்பு..!

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்த முதலீடுகள் அதிகளவில் பங்குச்சந்தைக்கு மாறியுள்ளது.

இதனால் தங்கம் விலை ஓரே நாளில் அதிகளவில் குறைந்து சாமானியர் தங்கம் வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. முதலீட்டுச் சந்தை வல்லுனர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்..? இப்போது தங்கம் வாங்குவது சரியா..?

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள்

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள்

சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் பயத்துடன் எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் அந்நாட்டின் வர்த்தகத்திற்கும் , பொருளாதாரத்திற்கும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கணிக்கப்பட்டது, இதுமட்டும் அல்லாமல் இந்தப் பணவீக்க உயர்வு தற்காலிகமானது மட்டுமே என்றும் விரைவில் இந்த நிலை மாறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம்

பங்குச்சந்தை வர்த்தகம்

இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் மட்டும் அல்லாமல் இந்தியச் சந்தை உட்பட மொத்த ஆசிய சந்தைக்கும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாகவே வெள்ளிக்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பு

சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பு


இதன் விளைவு தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து பெருமளவிலான முதலீடுகள் பங்குச்சந்தைக்கு மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் தங்கம் விலையில் பெரிய சரிவு உருவாகி சாமானியர்களுக்குச் சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் விலை

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து குறைந்து வந்தது. இதன் வாயிலாக வர்த்தக முடிவில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.65 சதவீதம் வரையில் சரிந்து 48,880 ரூபாய்க்குக் குறைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

வெள்ளிக்கிழமை விலை சரிவின் மூலம் பல நாட்களுக்குப் பின் தங்கம் விலை தனது 49000 ரூபாய் அளவீட்டில் இருந்த 48,000 அளவீட்டுக்குக் குறைந்துள்ளது. இந்த விலை சரிவைச் சரியான முறையில் பயன்படுத்திச் சாமானிய மக்கள் தங்கத்தைக் குறைந்த காலகட்ட நோக்கில் வாங்கலாம்.

சர்வதேச சந்தை தங்கம் விலை

சர்வதேச சந்தை தங்கம் விலை

இதேபோல் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,902.30 டாலரில் இருந்து 1,876 டாலர் வரையில் குறைந்துள்ளது. குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய சந்தை வர்த்தகம் முடிந்து அமெரிக்க வர்த்தக நேரத்தில் இந்தச் சரிவு உருவாகியுள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகம்

திங்கட்கிழமை வர்த்தகம்

இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்திலும் தங்கம் விலை குறைய அளவிலான வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு அதிக லாபம் பெறும் நோக்குடன் தங்கம் மீது செய்திருந்த அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதன் வாயிலாகவே தங்கம் விலை 1,876 டாலர் வரையில் சரிந்துள்ளது.

தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள்

தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள்

இந்நிலையில் தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள் அடுத்த ஒரு வாரத்தில் தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருப்பதால் காத்திருந்து வாங்குவதன் மூலம் கூடுதலான லாபத்தை அடையலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் உடனே தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கும் கணிசமான லாபத்தைப் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+