சர்பிரைஸ் கொடுக்கும் தங்கம் விலை.. இரண்டாவது நாளாக நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

தங்கம் விலையானது புதன் கிழமையன்று சர்வதேச சந்தையில் 1.4% சரிந்த பிறகு, இன்று அதிகளவு ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்படுகிறது. முந்தைய அமர்வினை போலவே இன்றும் சரிவினைக் காணுமா? இன்று தங்கம் விலை எப்படி இருக்கும். ப்யூச்சரின் தங்கம் விலை எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

ஸ்பாட் கோல்டின் விலையானது அவுன்ஸூக்கு 0.1% ஏற்றம் கண்டு, 1944.58 டாலர்களாக உள்ளது.

ஏன் பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், பொருளாதாரத்தினை எப்படி மேம்படுத்தலாம் என ஒவ்வொரு நாடும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொருளாதாரம் மீட்சி காணும்

பொருளாதாரம் மீட்சி காணும்

இதற்கிடையில் கொரோனா ஒரு புறம் அதன் வேலையை காட்டிக் கொண்டு இருந்தாலும், மறுபுறம் மக்கள் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பொருளாதாரம் விரைவில் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கு உண்மையான சாட்சியமே நேற்று வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பு குறித்தான தரவு தான்.

தங்கம் விலைக்கு ஆதரவு

தங்கம் விலைக்கு ஆதரவு

நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் தனியார் வேலைவாய்ப்பு விகிதமானது எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தாலும், முன்பை விட சற்று முன்னேற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் சந்தை மிக மெதுவாக வளர்ச்சி கண்டு வருவதையே இது காட்டுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா டாலரின் மதிப்பானது மீண்டும் சற்று அழுத்ததில் உள்ளது. இது தங்கத்தின் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

தங்கம் விலை அதிகம்

தங்கம் விலை அதிகம்

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஆறு நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பான சற்றே சரிவில் தான் காணப்படுகிறது. இது 92.852 டாலர்களாகவும் காணப்படுகிறது. இது தங்கத்தினை மற்ற நாணயதாரர்களுக்கு சற்று விலை அதிகமானதாகவும் மாற்றுகிறது. ஆக இது தங்கம் விலைக்கு இது ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் கொரோனா வைரஸ்

தங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் கொரோனா வைரஸ்

பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையின் மத்தியில் அமெரிக்கா மற்றும் உலகளாவிய பங்கு சந்தைகள், தங்கத்திற்கு எதிராக பேரணியாக திரண்டுள்ளது. எனினும் தங்கத்திற்கு ஆதரவாக கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், தங்கமே இறுதியில் முதலீட்டாளர்களின் சான்ஸாக அமைகிறது. ஆக எப்போதெல்லாம் தங்கம் விலை குறைகின்றதோ தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

அமெரிக்க - சீன பதற்றம் வேறு

அமெரிக்க - சீன பதற்றம் வேறு

இப்படி உலகமே கொரோனாவால் படாதபாடு பட்டு வரும் நிலையில் கூட, அமெரிக்கா சீனா பதற்றமும் மறுபுறம் அதிகரித்து வருகிறது. இது பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்னொரு சவாலாகவும் இருந்து வருகிறது. இது பொருளாதாரம் வளர்ச்சி காண்பதை தடுக்கும் விதமாக அமைகிறது. இன்னும் சொல்லப்போனால் மீட்சி காண போராட்டத்தினை காண வைக்கிறது என கோடக் செக்யூரிட்டீஸ் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
நல்ல சான்ஸினை முதலீட்டாளர்கள் மிஸ் பண்ண மாட்டார்கள்?

நல்ல சான்ஸினை முதலீட்டாளர்கள் மிஸ் பண்ண மாட்டார்கள்?

நல்ல சான்ஸினை முதலீட்டாளர்கள் மிஸ் பண்ண மாட்டார்கள்?

ஃஃபெடரல் வங்கி டாலரை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தங்கம் விலை குறையும் போது, அது நல்ல சான்ஸ் ஆக கருதப்படுவதால், தங்கம் விலையானது தொடர்ந்து நீண்டகால நோக்கில் ஏற்றம் காணவே வாய்ப்பாக அமைகிறது. ஏனெனில் உலகளாவிய பொருளாதார அச்சங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தின் விலை குறைந்தால், முதலீட்டாளர்கள் மிஸ் பண்ணுவார்களா என்ன? நிச்சயம் இல்லை. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாகத் தான் உள்ளது.

அமெரிக்கா தரவுகள் என்ன சொல்லப்போகின்றன?

அமெரிக்கா தரவுகள் என்ன சொல்லப்போகின்றன?

இன்றும் நாளையும் வரவிருக்கும் அமெரிக்கா டேட்டாக்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை நலனுக்கான டேட்டா மற்றும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் அமெரிக்காவின் பே ரோல் டேட்டா, டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் பெரியளவில் மாற்றத்தினை கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாததற்கு காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாமல் தான் காணப்படுகிறது. இன்று காலை 10.33 மணியளவில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.30 டலர்கள் குறைந்து, 1943.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையான 1938.90 டாலரினை உடைத்து சென்றால் மட்டுமே, இன்று நல்ல சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போதைக்கு பெரியளவில் மாற்றம் இல்லாமல் தான் காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலைக்கு போட்டியாக வெள்ளியின் விலையும் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸுக்கு 0.50% ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.055 டாலர்கள் அதிகரித்து, 27.457 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. புதன் கிழமையன்று ஏற்பட்ட பலமான சரிவிற்கு பின்னர், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்தவரையில் மூன்றாவது நாளாக தங்கம் விலையானது சர்பிரைஸ் கொடுத்து வருகிறது எனலாம். ஏனெனில் மூன்றாவது நாளாக 10 கிராம் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, 50,779 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக கிலோவுக்கு 22 ரூபாய் குறைந்து 68,232 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது டிசம்பர் கான்ட்ராக்டின் விலையாகும். இதுவும் மூன்றாவது நாளாக சரிவிலேயே காணப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலையில் பெரியளவில் இன்னும் மாற்றம் காணப்படவில்லை என்றாலும், புதன் கிழமையன்று சவரனுக்கு 448 ரூபாய் குறைந்திருந்தது. கிராமுக்கு 4,916 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 448 ரூபாய் குறைந்து, 39,328 ரூபாயாகவும் காணப்பட்டது.

தூய தங்கம் விலை நிலவரம்

தூய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று தூயதங்கத்தின் விலையானது, பெரியளவில் இன்னும் மாற்றம் காணப்படவில்லை என்றாலும், புதன் கிழமையன்று கிராமுக்கு 5,363 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 456 ரூபாய் குறைந்து, 42,904 ரூபாயாகவும் காணப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள் ஏற்றம் கண்டு வந்த நிலையில், புதன் கிழமையன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+