தங்கம் விலையானது கடந்த அமர்வில் உக்ரை ந் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் பலமான ஏற்றத்தினை கண்டது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொட்டது.
இதன் காரணமாக தங்க ஆபரண விலையும் உச்சம் தொட்டது. இந்தளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றதே? குறையவே குறையாதா? இனி என்ன தான் நடக்கும்?
இன்னும் போர் பதற்றமானது குறைந்தபடாக இல்லை. மாறாக இரண்டாவது நாளாகவும் உக்ரைனின் தலை நகரில் கடுமையான தாக்குதல் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. எனினும் இன்று முதலீட்டாளர்களுக்கும், தங்கம் ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கம் விலையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, 4,801 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து, 38,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 164 ரூபாய் குறைந்து, 5,237 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1312 ரூபாய் குறைந்து, 41,896 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,370 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 7.70 ரூபாய் குறைந்து, 65 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 650 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 7,700 ரூபாய் குறைந்து, 65,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், சர்வதேச சந்தையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.


Click it and Unblock the Notifications