இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?

Gold price update: இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டில் எதிர்ப்பார்ப்புகளுக்கு எதிராக மத்திய அரசோ வரி அதிகரிப்பினை செய்தது. தங்கத்திற்கு மட்டும் அல்ல, வெள்ளி,வைரம் என பல விலையுயர்ந்த உலோகங்களுக்கும் வரி அதிகரிப்பினை செய்தது. இது மேற்கொண்டு விலையை நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக தங்கம் விலையானது கடந்த அமர்வில் பெரியளவில் ஏற்றம் கண்டது. எனினும் சந்தை முடிவில் சரிவினைக் கண்டது.

அதனை தொடர்ந்து இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இனியும் தங்கம் விலை குறையுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எதிர்பார்த்ததை போல, வட்டி விகிதமானது 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டதை அடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது சரிவினை கண்டுள்ளது.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

மேலும் தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்தில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆக இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. இதே இந்திய சந்தையிலும் தங்கத்தின் நடப்பு கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இனி எப்படி இருக்கும்

இனி எப்படி இருக்கும்

தங்கம் விலையானது இன்று மட்டும் அல்ல, கடந்த மூன்று மாதங்களாகவே தொடர்ந்து நல்ல ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இது லாபத்தினை புக் செய்ய முதலீட்டாளர்கள் நினைத்திருக்கலாம். அதோடு 1895 டாலர்களை தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் உடைத்தால் அது மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம்.

இதுவும் ஒரு காரணம்?

இதுவும் ஒரு காரணம்?

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பானது தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பணவீக்கமும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றது. எனினும் தற்போது பணவீக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் கவர்ச்சிகரமான முதலீடு என்பதில் இருந்து சற்றே சரியத் தொடங்கியுள்ளது.

தங்கம் அதிகரிக்கலாம்

தங்கம் அதிகரிக்கலாம்

எப்படியிருப்பினும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியானது அதிகரிப்பு, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பல அரசியல் பதற்றங்கள், ரெசசன் அச்சம் என்பது தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது. ஆக இது தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1929.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.29% குறைந்து, 23.547 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது (ஏப்ரல் கான்ட்ராக்ட்) 10 கிராமுக்கு, 190 ரூபாய் அதிகரித்து, 57,885 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 106 ரூபாய் அதிகரித்து, 70,301 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து , 5440 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து, 43,520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, 593 4 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 710 ரூபாய் குறைந்து , 59,340 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.40 ரூபாய் குறைந்து, 76.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1400 ரூபாய் குறைந்து, 76,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+