தங்கம் விலை இரண்டாவது நாளாகவும் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கடந்த அமர்விலும் தங்கம் விலையானது 1% சரிவில் காணப்பட்டது.

சர்வதேச சந்தையிலும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.தொடர்ச்சியாக 4வது அமர்வாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

இது வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இது சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதமானது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். வரவிருக்கும் கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டியில்லா முதலீடு

வட்டியில்லா முதலீடு

வட்டி அதிகரிப்பின் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளது. இது தங்கத்தில் இது தேவையானது சரிவினைக் கண்டுள்ள நிலையில் வந்துள்ளது. இது தங்கத்தின் விலை குறைய காரணமாக அமையலாம். இது தங்கம் விலை மேற்கோண்டு வரவிருக்கும் நாட்களில் விலை குறைய காரணமாக அமையலாம்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

அதேசமயம் பல ஆய்வு நிறுவனங்களும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் வளர்ச்சியினை குறைத்து வருகின்றன. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம். ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் & வெள்ளி விலை

காமெக்ஸ் தங்கம் & வெள்ளி விலை

சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2.20 டாலர்கள் அதிகரித்து, 1741.70 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இதே வெள்ளியின் விலையானது 0.91% அதிகரித்து,21.062 டாலராக காணப்படுகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று தடுமாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 108 ரூபாய் அதிகரித்து, 52,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 460 ரூபாய் அதிகரித்து, 61,095 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று தடுமாறலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4905 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 39,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5351 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 128 ரூபாய் குறைந்து, 53,510 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 67 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 67,000 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+