தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது வரவிருக்கும் நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். இதனால் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
பணவீக்க தரவின் மத்தியில் இது வட்டி அதிகரிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களின் கவனம்
முதலீட்டாளர்களின் கவனம் முழுக்க வியாழக்கிழமையன்று வரவிருக்கும் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவில் தான் உள்ளது. ஆக அதுவரையில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெரியளவில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம். இதன் காரணமாகத் தான் தங்கம் விலையில் இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை.
ரெசசன் அச்சம்
அமெரிக்காவின் இந்த தரவானது அடுத்து வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகித மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை பணவீக்கம் இனியும் உச்சத்தில் இருந்தால் அது மேற்கொண்டு வட்டி அதிகரிப்பினை வேகப்படுத்தலாம். இது மேற்கோண்டு ரெசசனை ஊக்குவிக்கலாம். ஒரு புறம் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய வங்கியானது எடுத்தாலும், மறுபுறம் இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வேலை சந்தை
அதிகரித்து வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில் வேலை சந்தையானது பாதிக்கப்படலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய சந்தை, பிரிட்டன், சீனா என பல நாடுகளிலும் பொருளாதாரம் மெதுவான நிலையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. ஆக இவைகளும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையக்கூடும்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1881.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் தங்கம் விலை பெரியளவில் மாற்றம்ம் இல்லாவிட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.777 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் தங்கம் விலை பெரியளவில் மாற்றம்ம் இல்லாவிட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு 83 ரூபாய் அதிகரித்து, 55,795 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 245 ரூபாய் அதிகரித்து, 68,608 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 5230 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 41,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 575 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 80 ரூபாய் குறைந்து, 57,050 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 74,000 ரூபாயாக விற்பனை செய்யபட்டும் வருகின்றது.


Click it and Unblock the Notifications