கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே.. !

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இரண்டாவது நாளாக இன்று, தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

நிபுணர்கள் சொன்னதை போல, தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

எனினும் இன்று ராம் நவமி காரணமாக எம்சிஎக்ஸ் சந்தை விடுமுறையாகும். ஆக இன்று மாலை அமர்வு மட்டும் உள்ளதால், இதன் எதிரொலி மாலை அமர்வில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன பார்க்கலாம்?

என்னென்ன பார்க்கலாம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், இன்றோடு கடந்த இரண்டு அமர்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 7.85 டாலர்கள் அதிகரித்து, 1786.25 டாலர்களாக காணப்படுகிறது. முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சத்தினை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. மேலும் 1788.50 டாலர்களை உடைக்கும் பட்சத்தில் இது இன்னும் பலமாக ஏற்றம் காணலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இது தற்போது 1.17% அதிகரித்து, 26.137 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நீண்டகால நோக்கிலும் சற்று அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 4,506 ரூபாயாகவும், சவரனுக்கு 448 ரூபாய் அதிகரித்து, 36,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

தூய தங்கம் (24 கேரட் தங்கம் விலை ) விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 61 ரூபாய் அதிகரித்து, 4,916 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 39,328 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,160 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவும் முந்தைய நாளில் சற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது, நேற்று சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில் இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. தற்போது கிராமுக்கு 73.90 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 73,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆக இது ஆபரண வெள்ளியை வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்றத்தில் தங்கம் விலை

ஏற்றத்தில் தங்கம் விலை

தொடர்ச்சியாக தங்கம் விலையானது கடந்த வாரத்தில் ஏழு வார உச்சத்தில் காணப்பட்டது. இது அமெரிக்க டாலர் சற்று அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டது. அதிலும் ஆசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மேற்கொண்டு பரவி வரும் நிலையில், பொருளாதார சரிவு பற்றிய கவலையும் எழுந்துள்ளது. இதனால் சந்தையானது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க பத்திர லாபம் வீழ்ச்சி கண்டுள்ளதையடுத்து, டாலர் மதிப்பானது 0.1% சரிவினைக் கண்டுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் மேற்கொண்டு முதலீடுகள் குவிய ஆரம்பித்துள்ளன. மேலும் மத்திய வங்கிகள் பலவும் வட்டி விகிதங்களை மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்துள்ளன. ஆக இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

சிறந்த பாதுகாப்பு புகலிடமான தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. தற்போது வட்டி விகிதம் குறைவாக உள்ள நிலையில், மேற்கொண்டு ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விலை எப்படி இருக்கும்?

இன்று விலை எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீடியம் டெர்மிலும் தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரணத் தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகமிருப்பதால் விலை குறைய வாய்ப்பில்லை. எப்படி இருப்பினும் மக்கள் கட்டுபாடுகளுக்கு மத்தியில் வாங்க யோசிப்பதாலும், கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பதாலும், தேவை சற்று இனி வரும் காலத்தில் குறையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+