கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகிற போக்கினைக் பார்த்தால் நிபுணர்கள் சொல்வதெல்லாம் நடந்து விடும் போல் இருக்கிறதே. தங்கம் விலையானது கடந்த நான்கு தினங்களாகவே கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறது.

அதிலும் இன்று காலையில் தொடக்கத்தில் இருந்தே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகின்றது.

கடந்த ஒரு வார காலமாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது வாங்கியவர்களுக்கு நல்ல லாபம் என்றாலும், குறைந்த விலையில் வாங்காமல் விட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர் ஏற்றம்

தொடர் ஏற்றம்

நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. போகிற போக்கினை பாரர்த்தால் மீண்டும் 1800 டாலர்கள் என்ற லெவல் செல்லுமா? அங்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாகவே, தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1% அதிகரித்து, 1900.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வில் 1892.60 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1892.50 டாலர்களாக தொடங்கியுள்ளது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

அதோடு கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் 1912 டாலர்களை தொட்டது. இதே வாரகேண்டிலில் கடந்த கேண்டிலின் உச்சமும் இதுவேயாகும். ஆக அதனை உடைத்து சென்றால் இன்னும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையாவது கிட்டதட்ட 1% தான் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 4% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 3.62% ஏற்றம் கண்டு, 26. 846 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த 4 வர்த்தக அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வரும் நிலையில், 27.635 டாலர்களை உடைத்து சென்றால் இன்னும் இன்று சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது கிடுகிடு ஏற்றத்தில் உள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 495 ரூபாய் அதிகரித்து, 50,568 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நிபுணர்கள் சொல்வதனை போல் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை கிட்டதட்ட 4% ஏற்றம் கண்டிருந்த நிலையில், இந்திய சந்தையிலும் பலத்த ஏற்றத்தில் உள்ளது. தற்போது கிலோவுக்கு 2,176 ரூபாய் அதிகரித்து, 69,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வில் வெள்ளி விலையானது முடிவில் 67,509 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 69,000 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இன்று சந்தையில் தொடக்கா விலையும், இன்றைய குறைந்தபட்ச விலையும் 69,000 ரூபாய் என்பதால், சந்தை சற்று ஏற்றம் காணும் விதமாகவே உள்ளது.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

மற்ற முதலீடுகள் பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தங்கம் விலையானது பலமான ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் தற்போது நல்ல உச்சத்தில் இருப்பதால், தங்கம் விலையானது குறையும்போது வாங்கி வைக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இங்கு வாங்கி வைக்கலாம்.

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள்

தங்கம் விலைக்கு சாதகமாக கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், அது சர்வதேச அளவில் நிலவி நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய வகை கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் சாதகமாக இருக்குமா? இதனால் தங்கம் விலையானது என்னவாகும் என்ற குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தங்கம் Vs பங்கு சந்தை

தங்கம் Vs பங்கு சந்தை

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் காரனமாக, இந்திய சந்தையானது பலத்த சரிவினைக் கடந்த மார்ச் மாதத்தில் கண்டது. எனினும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 80% ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் வெள்ளி விலையானது 24% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தங்கம் விலையானது 18% ஏற்றம் கண்டு இருந்தது. இதே கடந்த 2018ல் 1.56% வீழ்ச்சியினையும் கண்டிருந்தது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

அமெரிக்க சீன வர்த்தக போர், குறைவான வட்டி விகிதம், அரசியல் பதற்றம் என பலவும் தங்கத்தினை விலை, தொடர்ச்சியாக ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. மேலும் நிபுணர்கள் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஏனெனில் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கொரோனா பரவல்

புதிய கொரோனா பரவல்

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் புதிய கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த புதிய வகை கொரோனாவில் இருந்து மக்களுக்கு ரீலிப் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் சற்று குறையும் போது வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இந்த ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தங்கம் வாங்கி வைத்த முதலீட்டாளர்களுக்கு இது ஜாக்பாட் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices gain for fourth day in row

Gold price update.. gold prices gain for fourth day in row
Story first published: Monday, December 28, 2020, 11:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X