கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையுமா? நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள தங்கம் விலையானது, இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தங்கத்தின் பங்கு நிச்சயம் இருக்கும்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது மீண்டும் எழுச்சி காண ஆரம்பித்துள்ளது. தங்கத்தின் விலை குறைய பல காரணிகள் இருந்தும் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதே ஏன்.

அதுவும் தங்கம் விலையானது இன்றோடு இரண்டாவது நாளாக ஏற்றம் காண தொடங்கியுள்ளது. சரி வாருங்கள் இன்றைய நிலவரம் என்ன?

இன்று என்னவெல்லாம் பார்க்க போகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்க போகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படியுள்ளது? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இனி விலை குறையுமா? அதிகரிக்குமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.

வார கேண்டில் பேட்டர்ன்

வார கேண்டில் பேட்டர்ன்

கடந்த வாரம் ஒரு கட்டுரையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கவே செய்யும். ஏனெனில் ஒன்று முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க நினைக்கலாம். அதோடு வார கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆக நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கி வைக்கலாம். ஆனால் குறுகிய கால நோக்கில் திங்கட்கிழமையன்று எப்படி வர்த்தகமாக போகிறது என்பதனை பொறுத்து வாங்கலாம் என்றும் கூறியிருந்தோம்.

தங்கம் தேவை அதிகரிக்கலாம்

தங்கம் தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் வரவிருக்கும் வாரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அதனைத் தொடர்ந்து பொங்கல் விழா என ஏராளமான பண்டிகைகள் வரவிருக்கின்றன. இதன் காரணமாக விழாக்காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையிலேயே தங்கம் விலை குறைந்தாலும், அது ஆபரணத் தங்கத்தில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று Comex சந்தையில் தங்கம் விலை

இன்று Comex சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, இன்று இரண்டாவது நாளாக சற்று ஏற்றத்தினை கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 3.15 டாலர்கள் அதிகரித்து, 1858.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1855.30 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று 1856.20 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதுவும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே அமைந்துள்ளது.

இன்று Comex வெள்ளி விலை நிலவரம்

இன்று Comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தினை போலவே சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த அமர்வில் வெள்ளியின் விலையானது 24.644 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 24.622 டாலர்களாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது 0.76% ஏற்றம் கண்டு, 24.832 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

mcx தங்கம் விலை நிலவரம்

mcx தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றத்தினை காணும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 127 ரூபாய் அதிகரித்து, 49,570 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 49,443 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,510 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே அமைந்துள்ளது.

mcx வெள்ளி விலை நிலவரம்

mcx வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் இரண்டாவது நாளாக இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 392 ரூபாய் அதிகரித்து, 65,245 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் 64,853 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 65,000 ரூபாயாக தொடங்கியுள்ளது.

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வார கேண்டில் பேட்டனில் மார்னிங் ஸ்டார் பேட்டர் பார்ம் ஆகியுள்ளது. அதோடு தற்போது தினசரி கேண்டில் பேட்டர்னிலும் சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக தங்கத்தினை நீண்டகால நோக்கில் தற்போது வாங்கி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் இன்று ஃபெடரல் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. ஏற்கனவே இந்த வட்டி விகிதமானது இன்னும் சில வருங்டங்களுக்கு அப்ப்டியே தான் இருக்கும். வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நிலை இருந்து வருவதால், சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலையும் தக்கவைத்துக் கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக சரிவினைக் தடுக்கலாம்

அதிக சரிவினைக் தடுக்கலாம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் சாதகமாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் அதிக விலையேற்றத்தினை பற்றி தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக சரிவினை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 50,150, முக்கிய சப்போர்ட் லெவல் 47,700 ரூபாயாகும். தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது மீடியம் டெர்மிலும் அதிகரிக்கும் விதமாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices gain for second day in mcx market

Gold price updates.. Gold prices fall sharply today, silver rates also plunged
Story first published: Wednesday, December 16, 2020, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X