இந்திய மக்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள தங்கம் விலையானது, இன்று மீண்டும் மூன்றாவது நாளாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தங்கப் பிரியர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நிபுணர்கள் சொல்வதனைபோல் தங்கம் விலையானது மீண்டும், அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலரும் இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 டாலர்களை தொடலாம். 2021ல் 3000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை குறைய பல காரணிகள் இருந்தும் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதே. இன்னும் எவ்வளவு ஏற்றம் காணும். நிபுணர்கள் சொல்வது போல் அந்த இலக்கினை தொடுமா? இல்லை இன்னும் சரியும் வாய்ப்புள்ளதா? வாருங்கள் பார்க்கலாம்.

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?
இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இனி விலை குறையவே குறையாதா? இல்லை இன்னும் அதிகரிக்குமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை கேண்டில் பேட்டர்ன்
தங்கம் விலையானது வார கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆக நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். தங்கத்திற்கு ஆதரவாக பல காரணிகளும் உள்ள நிலையில் தங்கம் விலையானது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் தேவை
இந்தியாவில் வரவிருக்கும் வாரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அதனைத் தொடர்ந்து பொங்கல் விழா என ஏராளமான பண்டிகைகள் வரவிருக்கின்றன. இதன் காரணமாக விழாக்காலத்தில் தங்க ஆபரண தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையிலேயே தங்கம் விலை குறைந்தாலும், அது ஆபரணத் தங்கத்தில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் இன்றோடு மூன்றாவது நாளாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 14.35 டாலர்கள் அதிகரித்து, 1873.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1859.10 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று 1868.55 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதுவும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே அமைந்துள்ளது.

இன்று காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த அமர்வில் வெள்ளியின் விலையானது 25.052 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 25.520 டாலர்களாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது 2.41% ஏற்றம் கண்டு, 25.657 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றத்தினை காணும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 249 ரூபாய் அதிகரித்து, 49,846 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 49,597 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 49,720 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே அமைந்துள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் மூன்றாவது நாளாக இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 1189 ரூபாய் அதிகரித்து, 67,100 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் 65,911 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 66,670 ரூபாயாக தொடங்கியுள்ளது.

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வார கேண்டில் பேட்டனில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. அதோடு தற்போது தினசரி கேண்டில் பேட்டர்னிலும் சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக தங்கத்தினை நீண்டகால நோக்கில் தற்போது வாங்கி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மீடியம் டெர்மில் 10 கிராம் தங்கம் விலையானது 50,000 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் சரிவு
தங்கம் விலையில் முக்கிய காரணியாக இருக்கும் டாலர் மதிப்பானது இரண்டரை வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது விலை உயர்ந்த ஆபரணமான தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஊக்கதொகைகள் பெரிய அளவில் வரும்பட்சத்தில் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,800 - 50,050 ரூபாயாகும். இதே முக்கிய சப்போர்ட் லெவல் 49,300 - 49,100 ரூபாயாகும். தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது மீடியம் டெர்மிலும் அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 65,300 - 64,800 - 49,100 ரூபாயாகும். முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 66,800 - 67,500 ரூபாயாகும்.