உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சமீப வாரங்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் சர்வதேச சந்தையில் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது.

இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 7,500 சரிவில் காணப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக, கடந்த சில வாரங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் இன்று தங்கம் விலை எப்படி இருக்கும். நீண்டகால நோக்கில் இனி எப்படி இருக்கும்? விலை குறையுமா? எவ்வளவு குறையும்? அல்லது அதிகரிக்குமா? காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றோடு இரண்டாவது நாளாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனினும் இன்று பெரியளவில் ஏற்றம் காணமல் தற்போது அவுன்ஸூக்கு 7.20 டாலர்கள் அதிகரித்து, 1,837.20 டாலர்களாக
வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வில் 1836.60 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1836.65 டாலர்களாக தொடங்கியுள்ளது.

 

 

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது பலமான ஏற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது 1.21% ஏற்றம் கண்டுள்ளது. இது 0.286 டாலர்கள் அதிகரித்து, 25.140 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் சர்வதேச சந்தையில் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டாலும், எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து, 48,850 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவு விலையினை விட, இன்று காலையில் சற்று ஏற்றத்துடனே தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாக, எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 65,533 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் இரண்டாவது தினமாக இன்று தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.

பட்டையை கிளப்பிய பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பிய பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள் பல வித சாதகமான காரணங்களினால் புதிய உச்சத்தினை எட்டி வருகின்றன. இது அடுத்தடுத்து கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், ஏற்றம் கண்டு வருகின்றன. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான சாதகமான அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. அதோடு மீண்டுமொரு ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs பத்திர லாபம்

டாலர் Vs பத்திர லாபம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பும் மேற்கொண்டு ஏற்றத்தத்தில் உள்ளது. அமெரிக்க பத்திரங்களின் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும்
தங்கம் விலையானது தற்போது சற்று ஏற்றத்தினை கண்டாலும், டாலரின் மதிப்பு, அமெரிக்க ஊக்கத்தொகை, பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்புகள் போன்றவை தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் மீண்டு வரலாம்

பொருளாதாரம் மீண்டு வரலாம்

அமெரிக்க பத்திரங்களின் லாபமானது அதிகரித்துள்ளது, பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கமானது, பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மிகப்பெரிய அளவில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டால், அதனால் டாலரின் மதிப்பு வலுவடையும். ஆக இது சந்தைக்கு சாதகமாக அமையும். பணவீக்கமும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய ஒரு காரணமாக அமையலாம். எனினும் குறைந்தபட்ச விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம்.

புதிய அதிபர் ஜோ பிடன்

புதிய அதிபர் ஜோ பிடன்

பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஒரு வழியாக ஜோ பிடன் நாளை பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பிடன் பதவியேற்ற பின்பு, பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது
டாலருக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தங்கம் விலைக்கு எதிராக அமையலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும் குறைந்தபட்ச விலையில் தங்கத்தினை முதலீட்டாளர்கள் வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு டெக்னிக்கலாக தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்படுவதால், தங்கம் விலை சற்று ஏற்றம் காணவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தங்கத்தினை நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கலாம்.

Array

Array

இண்ட்ராடே லெவல்கள் - PP - 48,832
ரெசிஸ்டன்ஸ் - ரூ.49,056, 49,219, 49,606
சப்போர்ட் - ரூ.48,669, 48,445, 48,058

வார அப்டேட் - PP - 48936
ரெசிஸ்டன்ஸ் - ரூ.49,335, 49,969, 51,002
சப்போர்ட் - ரூ.48,302, 47,903, 46,870

Array

Array

இண்ட்ராடே லெவல்கள் - PP - 65,305

ரெசிஸ்டன்ஸ் - ரூ.65,826, 66,223, 67,141
சப்போர்ட் - ரூ.64,908, 64,387, 63469

வார அப்டேட் - PP - 65,071

ரெசிஸ்டன்ஸ் - ரூ.66,540, 68,316, 71,561
சப்போர்ட் - ரூ.63,295, 61,826,58,581

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices gain today, but down Rs.7,500 from record high

Gold price updates.. gold prices gain today, but down Rs.7,500 from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X