சும்மா எகிறி அடிக்கும் தங்கம்.. இனி குறையுமா? குறையாதா? சொன்னதெல்லாம் பலித்திடும் போலிருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகிற போக்கினைக் பார்த்தால் நிபுணர்கள் சொன்னதை போல, மீண்டும் தங்கம் வரலாற்று உச்சத்தினை தொட்டு விடும் போல் இருக்கிறதே. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும். விலை குறையவே குறையாதா? மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா?

 

அதிலும் இன்று காலையில் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலையானது, பட்டையை கிளப்பிக் கொண்டு வர்த்தகமாகி வரும் நிலையில், இனி குறையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீப வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், கடந்த ஒரு வார காலமாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது வாங்கியவர்களுக்கு நல்ல லாபம் என்றாலும், குறைந்த விலையில் வாங்காமல் விட்டவர்களுக்கு இழப்பாகவே உள்ளது. ஏனெனில் இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்கம் விலை தொடர் ஏற்றம்

தங்கம் விலை தொடர் ஏற்றம்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று பல நிபுணர்கள் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இது ஏற்கனவே முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபமாக பார்க்கப்பட்டாலும், குறைந்த விலையில் வாங்காமல் விட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. போகிற போக்கினை பாரர்த்தால் மீண்டும் 1800 டாலர்கள் என்ற லெவல் செல்லுமா? என்பதே சந்தேகமாகத்தான் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இன்றோடு இரண்டு வர்த்தக அமர்வுகளாகவே, தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1.68% அதிகரித்து, 1926.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வில் 1917.20 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1916.80 டாலர்களாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வில் ஏற்பட்ட உச்சமான 1918.85 டாலர்களையும் இன்று உடைத்து காட்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்
 

தங்கம் விலை அதிகரிக்கலாம்

கடந்த ஆறு ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் 1912 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. முடிவு விலையும் அதற்கு மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இன்று தொடக்கத்தில் அதற்கு மேலாக தொடங்கியுள்ள நிலையில், இன்னும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையாவது கிட்டதட்ட 2% தான் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் வெள்ளியின் விலையானது 3% மேல் ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 3.16% ஏற்றம் கண்டு, 27. 245 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த 2 வர்த்தக அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வரும் நிலையில், கடந்த அமர்வில் 27.008 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 27.015 டாலர்களாக தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது கிடுகிடு ஏற்றத்தில் உள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 576 ரூபாய் அதிகரித்து, 50,820 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நிபுணர்கள் சொல்வதனை போல் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 3% மேல் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இந்திய சந்தையிலும் பலத்த ஏற்றத்தில் உள்ளது. தற்போது கிலோவுக்கு 1,455 ரூபாய் அதிகரித்து, 69,578 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வில் வெள்ளி விலையானது முடிவில் 68,123 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 68,499 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இன்று சந்தையில் தொடக்க விலையும், இன்றைய குறைந்தபட்ச விலையும் 68,499 ரூபாய் என்பதால், சந்தை சற்று ஏற்றம் காணும் விதமாகவே உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம்

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் வீரியமும் மிக அதிகம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நிலை ஏற்படலாம் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தங்கம் விலையானது பலமான ஏற்றம் கண்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் இரண்டு மாதத்தில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. அதோடு புதிய கொரோனா அச்சத்திற்கு மத்தியில், கொரோனா தடுப்பூசிகள் சரி வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டாலரின் மதிப்பு சரிவு

டாலரின் மதிப்பு சரிவு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் அமெரிக்கா டாலரின் மதிப்பு, அழுத்ததினை கண்டு வருகின்றது. அதிகரித்து வரும் கொரோனா, கட்டுப்பாடுகள், அமெரிக்கா சீனா பிரச்சனை என பல காரணங்களினால், டாலரின் மதிப்பு அழுத்தத்தில் உள்ளது. இதனால் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் 2 செனட் சபை உறுப்பினர்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், முதலீட்டாளர்கள் கவனத்தில் இருந்து வருகின்றது.

அரசியல் பதற்றம்

அரசியல் பதற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி கண்டிருந்தாலும், அவரின் வெற்றியை முறியடிக்கும் விதமாக குடியரசு கட்சி செயல்பட்டு வருகிறது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதனால் பதவியேற்பினையும் டிரம்பு தரப்பினர் தள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது இன்னும் டாலரின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள்

தங்கம் விலைக்கு சாதகமாக கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகளும் வந்து கொண்டுள்ளன. எனினும் இது சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலையை மாற்றுமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. ஏனெனில் புதிய வகை கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் சாதகமாக இருக்குமா? இதனால் தங்கம் விலையானது என்னவாகும் என்ற குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் சற்று குறையும் போது வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இந்தாண்டிலும் நிபுணர்கள் தங்கம் விலையானது மீண்டும் புதிய உச்சத்தினை தொடும் என்று கூறி வரும் நிலையில், அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது. இது தங்கம் வாங்கி வைத்தவர்களுக்கு இது ஜாக்பாட் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices gains for second day in row

Gold price update.. gold prices gains for second day in row
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X