தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? வாங்கலாமா?

தங்க ஆபரணத்தினை பொறுத்த வரையில் இந்தியாவில் பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கும் ஒரு ஆபரணமாகும்.

இந்த கொரோனா காலத்தில் கூட கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது என்றால் பாருங்களேன். அந்தளவுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் நம் மக்களுக்கு குறையவில்லை.

அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. இதற்கிடையில் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையும், உச்சத்தினையும் தொட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது (10,கிராம்) 54,500 ரூபாயாக உச்சத்தினை தொட்டது. இதே 24 கேரட் தங்கத்தின் விலையானது அதே நாளில் 55,500 ரூபாயினை தொட்டது. எனினும் அந்த மாத இறுதியிலேயே மீண்டும் தங்கம் விலையானது சரிய தொடங்கியது. கிட்டதட்ட ஆகஸ்ட் மாதத்திலேயே 22 கேரட் தங்கம் விலையானது 3.81 சதவீதம் குறைந்தது.

செப்டம்பரில் விலை நிலவரம்

செப்டம்பரில் விலை நிலவரம்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத தொடக்கம் முதல் கொண்டே சற்று தடுமாறி வரும் நிலையில் செப்டம்பர் 1 அன்று 22 கேரட் தங்கத்தின் விலையானது (10,கிராம்) 49,720 ரூபாயினை தொட்டது. இதே தூய தங்கத்தின் (24 கேரட்) விலையானது, 54,200 ரூபாயினை தொட்டது. இந்த விலையினை இன்று வரை கணக்கிடும் போது 22 கேரட் தங்கம் விலையானது 10 கிராமுக்கும் 1,920 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே 24 கேரட் தங்கத்தின் விலையானது,10 கிராமுக்கு 2,060 ரூபாயும் குறைந்துள்ளது.

நடப்பு வாரத்தில் தங்கம் விலை நிலவரம்?

நடப்பு வாரத்தில் தங்கம் விலை நிலவரம்?

நடப்பு வாரத்தில் இதுவரை 5 நாட்கள் தங்கம் விலையானது குறைந்துள்ளது. வாரத் தொடக்கத்தில் 10 கிராமுக்கு 49,340 ரூபாயாக இருந்த 22 கேரட் தங்கத்தின் விலையானது, இன்று 250 ரூபாய் குறைந்து 47,800 ரூபாயாக உள்ளது. அதாவது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,780 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,240 ரூபாயாகவும் காணப்படுகிறது. நடப்பு வாரத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 2,060 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் நடப்பு வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. நடப்பு வார தொடக்கத்தில் இருந்தே 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 53,820 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 52,140 ரூபாயாகும். நடப்பு தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 1,680 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 59 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 590 ரூபாயாகவும், கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 59,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையானது தங்கத்தினை போலவே படி சரிவில் தான் காணப்படுகிறது. நடப்பு வார தொடக்கத்தில் 67,000 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, இன்று 59,000 ரூபாயாகும். இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 8,000 ரூபாய் குறைந்துள்ளது.

 இனி ஆபரணத் தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி ஆபரணத் தங்கம் விலை எப்படி இருக்கும்?

சர்வதேச சந்தையின் எதிரொலியை பொறுத்து தான், இங்கும் தங்கம் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக தங்கம் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதோடு சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்திய சந்தையிலும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+